Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த இரண்டு ராசிக்காரங்க மவுன விரதம் இருக்கலாம் - இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி என பார்க்கலாம். ரிஷபத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக இருக்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய தினம் கார்த்திகை 8ஆம் நாள் சனிக்கிழமை, பிரதமை திதி காலை 09.01 வரை பின்பு தேய்பிறை துவிதியை. ரோகிணி நட்சத்திரம் பின்னர் மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இன்று வாஸ்து நாள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

விருச்சிகத்தில் சூரியன், குரு, புதன், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது, கும்பம் ராசியில் செவ்வாய், ரிஷபத்தில் சந்திரன், கடகத்தில் ராகு, துலாம் ராசியில் சுக்கிரன் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

துலாம் ராசிக்காரர்கள் மவுன விரதம் இருக்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் மனக்கவலை அடைய வேண்டாம். குழப்பங்கள் தீர முருகனை வணங்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மகிழ்ச்சியான நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் ஏமாற்றம் தரும். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 7.

ரிஷபம்:

ரிஷபம்:

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கூடுதல் வேலைப்பளு இருக்கும். ராசியான எண் 5, ராசியான நிறம் பச்சை.

மிதுனம்:

மிதுனம்:

ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சின்னச்சின்ன கவலைகள் மனதை கஷ்டப்படுத்தும். பணப்பற்றாக்குறையால் பாதிப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். ராசியான எண் 6, ராசியான நிறம் இளம் சிவப்பு.

கடகம்:

கடகம்:

ராசிக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்பும் மரியாதையும் அலுவலகத்தில் அதிகரிக்கும். ராசியான எண் 8 ராசியான நிறம் மஞ்சள்.

சிம்மம்:

சிம்மம்:

ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். செய்யும் முயற்சிகளில்

வெற்றி கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள். ராசியான எண் 9, ராசியான நிறம் வெள்ளை.

கன்னி:

கன்னி:

ராசிக்கு ஒன்பதால் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். அமைதியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள், உறவினர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ராசியான எண் 6, ராசியான நிறம் இளம் பச்சை.

துலாம்

துலாம்

ராசிக்கு எட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சந்திராஷ்டமம் நீடிப்பதால் அசதியும் மனச்சோர்வும் வரும். அலுவலகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். பேசி வம்பில் மாட்டுவதை விட பேசாமல் மவுன விரதம் இருக்கலாம். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 7.

விருச்சிகம்:

விருச்சிகம்:

ராசிக்கு ஏழாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் வீட்டில் தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திருமண சுபகாரியத்திற்கான முயற்சிகளை செய்யலாம். காதலை சொல்ல நல்ல நாள் இன்று. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 9.

தனுசு:

தனுசு:

ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் மறைவதால் வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் ப்ளூ, ராசியான எண் 8.

மகரம்:

மகரம்:

ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் இன்று தொல்லைகள் அதிகமாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் குறையும். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் செய்யும் வேலையில் திருப்தி ஏற்படும். பணப்பற்றாக்குறை தீரும் நாள். ராசியான நிறம் இளம் சிவப்பு, ரசியான எண் 5.

கும்பம்:

கும்பம்:

ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அம்மாவின் உடல் நிலையில் அக்கறை தேவை. அம்மாவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களினால் அலைச்சல் ஏற்படும் என்றாலும் ஆதாயம் கிடைக்கும். ராசியான நிறம் கரும்பச்சை, ராசியான எண் 4.

மீனம்:

மீனம்:

ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+