மேஷம், விருச்சிகம் ராசிக்காரங்கள் மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள்
விருச்சிகம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
சென்னை: ஆவணி 04 ஆம் தேதி திங்கட்கிழமை, தசமி திதி பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.41 வரை பின்பு மூலம் நட்சத்திரம். இன்றைக்கு நாள் முழுவதும் சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு யாருக்கு என்ன பலன்கள், அதிர்ஷ்ட எண்கள் என பார்க்கலாம்.
சிம்மத்தில் சூரியன் கன்னியில் சுக்கிரன், கடகத்தில் புதன் மற்றும் ராகு, துலாமில் குருபகவான், விருச்சிகத்தின் சந்திரன் தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் செவ்வாய் கேது என இன்றைய கிரக நிலைகள் அமைந்துள்ளன.
விருச்சிகம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதாலும், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதாலும் இரண்டு ராசிக்காரர்களும் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருப்பது நல்லது.

மேஷம்:
ராசிக்கு எட்டாவது வீட்டில் சந்திரன் உட்கார்ந்து இருப்பதால் இரவு வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. வீட்டில், வெளியிடத்தில் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வதை விட பேசாமல் இருப்பது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது. நீங்கள் எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ராசியான எண் 3, ராசியான நிறம் வெள்ளை.

ரிஷபம்:
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள் நன்மையான நாள். ராசியான நிறம் 5, ராசியான நிறம் மஞ்சள்.

மிதுனம்:
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். ராசியான எண் 8, ராசியான நிறம் நீலம்.

கடகம்:
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. நினைத்த காரியம் நிறைவேறும் நாள். ராசியான எண் 4, ராசியான நிறம் பச்சை.

சிம்மம்:
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்றைக்கு புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வண்டி வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம் தேவை. ராசியான நிறம் 5, ராசியான நிறம் சிவப்பு.

கன்னி:
ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4.

துலாம்:
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியான எண் 2, ராசியான நிறம் மஞ்சள்.

விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனக்கலக்கம் ஏற்படும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. ராசியான எண் 6, ராசியான நிறம் பச்சை.

தனுசு:
ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தொழில் வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்களை தவிர்ப்பது நல்லது. ராசியான எண் 5, ராசியான நிறம் வெள்ளை.

மகரம்:
ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு இன்றைக்கு தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளைத் தருவீர்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 7.

கும்பம்:
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தொழில் செய்யும் இடத்தில் மதிப்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வருமானம் பெருகும் நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 9.

மீனம்:
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று தரிசனம் செய்வீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும் என்பதால் இன்றைக்கு உற்சாகமாக இருப்பீர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications