மகரத்திற்கு சந்திராஷ்டமம்..... - இன்று 12 ராசிக்கும் பலன்கள்
பிப்ரவரி 1ஆம் தேதி மாதத்தின் முதல்நாள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைக்கு பலன் எப்படி என்று அறிந்து கொள்வோம்.
சென்னை: பிப்ரவரி மாதத்தின் முதல்நாள் இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.
மனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ராகு உடன் சந்திரன் இணைந்து பயணிக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு மேல் சிம்மராசியில் மகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்.
மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம்
உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் இருக்கும் சந்திரன் இன்று பிற்பகல் முதல் 5வது இடத்திற்கு நகர்கிறார். குருவும், சனியும் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றனர். இன்றைக்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுப்பீர்கள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ரிஷபம்
இன்றைய தினம் சந்திரன் ராசிக்கு 4வது இடமான சிம்மத்தில் நுழைகிறார். இன்றைய தினம் நீங்கள்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். குருவும், சனியும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சந்திரனின் நிலையால் அலுவலகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மிதுனம்
ராசிக்கு மூன்றாவது இடத்திற்கு வரும் சந்திரனால் மனோதைரியம் அதிகரிக்கும். கண்டஞ்சனி காலமென்றாலும் 5ஆம் இடத்து குருவினால் நீங்கள் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். இன்றைய தினம் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கடகம்
இன்றைய தினம் உங்கள் ராசியில் சந்திரன் மாலை 3 மணி வரை நீடிக்கிறார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். மனதில் சின்னச்சின்ன குழப்பம் வந்து போகும். கணுக்கால் வலிக்கும். இன்றைக்கு வியாபாரத்தில் வருமானம் சுமார்தான். பிற்பகல் வரை அலுவலகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையில் சந்திரன் ராசியில் இருந்து சிம்மத்திற்கு நகர்ந்து விடுகிறார். இரண்டாம் இடத்திற்கு வரும் சந்திரனால் உங்களுக்கு மாலைக்கு மேல் வருமானம் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

சிம்மம்
பிற்பகல் வரை 12வது இடத்தில் இருக்கும் சந்திரன் மாலையில் ராசிக்குள் நுழைகிறார். வீட்டில் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். முன்கோபத்தை தவிருங்கள். கூடுமானவரை அமைதியை கடைபிடிப்பது நல்லது. இன்றைக்கு பிற்பகல் வரை ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். ராசி எண்: 9 ராசியான நிறங்கள்: ஊதா, ரோஸ்

கன்னி
இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12வது இடத்திற்கு வரும் சந்திரனால் சில விரைய செலவுகள் ஏற்படும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். இன்றைய தினம் வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும் ஏற்றுக்கொண்டு திறம்பட செய்வீர்கள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: ப்ரவுன், கிரே

துலாம்
இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணிக்கிறார். இன்றைய தினம் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களை இன்றைக்கு சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் அதை திறம்பட சமாளிப்பீர்கள். இன்றைக்கு ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

விருச்சிகம்
சந்திரன் பத்தாவது இடத்திற்கு வருவது சாதகமான அம்சமாகும். ஏழரை சனியில் பாதச்சனி நீடிக்கிறது. குருபகவான் விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் சந்திரனால் நன்மைகள் நடக்கும். இன்றைக்கு
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். இன்றைக்கு புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முக்கிய நபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: வெள்ளை, நீலம்

தனுசு
இன்றைக்கு பிற்பகல் வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். சந்திரன் பிற்பகலுக்கு மேல் 9வது இடத்திற்கு வருகிறார். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. இன்றைய தினம் யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். இன்றைய தினம் அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

மகரம்
சந்திரன் எட்டாவது இடத்தில் அமரப்போவதால் இன்று பகல் 03-06 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இன்றைக்கு எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும். தொடங்குவதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பாதிப்பை குறைக்க கொஞ்சம் மிளகு சாப்பிடலாம். இன்றைக்கு ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

கும்பம்
கும்ப ராசிக்கு சனியும், குருவும் சாதகமாக உள்ளதால் வருமானம் அதிகரிக்கும். ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வரும் சந்திரனால் இன்றைக்கு உங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மீனம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 6வது இடத்திற்கு வருகிறார் சந்திரன். பத்தாம்மிட சனி அட்டம ஸ்தானத்தில் உள்ள குரு கொஞ்சம் ஆட்டித்தான் வைப்பார்கள். செவ்வாய் 9வது இடத்தில் அமர்ந்துள்ளது சாதகமான அம்சம். இன்றைக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. இன்றைக்கு அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ராசியான எண்: 6 ராசியான நிறம்: இளஞ்சிவப்பு.












Click it and Unblock the Notifications