விருச்சிக ராசிக்காரர்களே... வம்பை விலைக்கு வாங்கதீங்க - 12 ராசிக்கும் பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் இன்றைக்கு பலன்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017: மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்,பரிகாரங்கள்- வீடியோ

    சென்னை: பிப்ரவரி 26ஆம் தேதியான இன்று மேஷம் முதல் ரிஷபம் வரை 12 ராசிக்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

    மிதுனராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய கிரகநிலைப்படி கடகத்தில் ராகு, துலாம் ராசியில் குரு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது அமர்ந்துள்ளனர். கும்பம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் அமர்ந்துள்ளனர்.

    விருச்சிக ராசிக்கு இன்றைக்கு இரவு வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் அமைதி காப்பது நல்லது.

    மேஷம்

    மேஷம்

    உங்கள் ராசிக்கு 3வது இடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால்
    தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மனதில் சந்தோஷம் மனதில் நிலைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். ராசிக்கு 11வது இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.
    ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: நீலம்.

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்கு இரண்டாவது இடத்தில் தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.
    இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். 10வது வீட்டில் சூரியன் அமர்ந்துள்ளதால் அரசுவகையில் நன்மை பெறலாம். ராசியான எண்: 6 ராசியான நிறம், பச்சை

    மிதுனம்

    மிதுனம்

    இரவு 10 மணி வரையுமே ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வீட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவும். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். கண்டச்சனியால் வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

    கடகம்

    கடகம்

    ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் தொந்தரவு தரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். இரவு 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவை. ராசியான எண்: 7 ராசியான நிறம்: மஞ்சள்

    சிம்மம்

    சிம்மம்

    ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவை குறைவின்றி நிறைவேறும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: மெரூண், வெள்ளை

    கன்னி

    கன்னி

    ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
    ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். ராசியான எண்: 8 ராசியான நிறம்: பிங்க்

    துலாம்

    துலாம்

    ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். லாபம் சுமாராக இருக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: பச்சை, ரோஸ்

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இரவு 10 மணி வரையுமே சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். ராசியான எண்: 1 ராசியான நிறம், இளஞ்சிவப்பு, வெள்ளை

    தனுசு

    தனுசு

    ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே காதல் உணர்வு அதிகரிக்கும்.
    கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ராசிக்குள் சனி அமர்ந்துள்ளார். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார். இரவு 10மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவை. ராசியான எண்: 3 ராசியான நிறம் - சிவப்பு.

    மகரம்

    மகரம்

    ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் மறைந்துள்ளார். ராசிக்குள் கேது அமர்ந்துள்ளார்.சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். 12வது இடத்தில் சூரியன் சுக்கிரன், புதன் அமர்ந்துள்ளனர். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: ரோஸ், வைலெட்

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பிள்ளைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவும்.
    மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் யார் என்ற உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். ராசியான எண்: 2 ராசிய நிறம் : ஊதா

    மீனம்

    மீனம்

    ராசிக்கு 4வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ராசியான எண்: 4 ராசியான நிறம் இளஞ்சிவப்பு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+