விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்- 12 ராசிக்கும் இன்று பலன் எப்படி?
மிதுனத்தில் சந்திரன், விருச்சிகத்திற்கு சந்திராஷ்டம் இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என தெரிந்து கொள்வோம்.
சென்னை: ஜனவரி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை, வாரத்தின் முதல்நாள் 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
மனோகாரகன் சந்திரன் மிதுனத்தில் அமர்ந்துள்ளார். கடகத்தில் ராகு, மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் வாயை மூடி பேசவும், மவுனமே நல்லது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு எப்படியிருக்கும் என பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு 3வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். இன்றைய தினம் உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். பணியிடத்தில், அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். ராசி எண்கள்: 4, ராசியான நிறங்கள்: மயில் நீலம்,ப்ரவுன்

ரிஷபம்
ராசிக்கு இரண்டாவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்-. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வீர்கள். இன்றைக்கு யாருக்கும் வாக்கு தரவேண்டாம். ராசி எண்: 2 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே,பச்சை

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருப்பதால் பேச்சில் வெறுப்பு ஏற்படும். வீட்டில் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் இன்றைக்கு போராட்டமாகவே இருக்கும். அலுவலக பணியில் இன்றைக்கு கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ராசி எண்: 1, ராசியான நிறங்கள்: பிங்க்,க்ரீம் வெள்ளை

கடகம்
ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சின்னச்சின்ன உடல் உபாதைகள் வரும். உறக்கம் கெடுவதால் தலைவலிகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. ராசி எண்: 7, ராசியான நிறங்கள்: பிஸ்தா பச்சை,மஞ்சள்

சிம்மம்
ராசிக்கு லாப ஸ்தானமான 11வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். இன்றைக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும், பணவரவு அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். ராசி எண்: 8, ராசியான நிறங்கள்: மெரூண்,வெள்ளை

கன்னி
ராசிக்கு 10வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். வீட்டில் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். காதலி அல்லது மனைவி மற்றும் பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். ராசி எண்: 5 ராசியான நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்

துலாம்
ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ஆலிவ் பச்சை,ரோஸ்

விருச்சிகம்
ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திராஷ்டமம் நீடிப்பதால் வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள் இன்றைய தினம் ஜாக்கிரதையாக இருக்கவும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். ராசி எண்: 6 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை

தனுசு
ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் வீட்டில் மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அம்மா உங்களை ஆதரித்துப் பேசுவார். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: ரத்த சிவப்பு,கிரே

மகரம்
ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் மறைந்துள்ளார். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் பணி செய்பவர்கள் இன்றைக்கு சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ராசி எண்: 6 ராசியான நிறங்கள்: ரோஸ்,வைலெட்

கும்பம்
ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ராசி எண்: 7 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா

மீனம்
ராசிக்கு 4வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். இன்றைக்கு அலுவலகத்தில் பணியில் திருப்தி ஏற்படும். ராசி எண்: 1 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு,பிங்க்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications