கடகத்தில் சந்திரன்... தனுசுக்கு சந்திராஷ்டமம் - 12 ராசிகளுக்கும் பலன்கள்

இன்றைய தினம் கடக ராசிக்குள் சந்திரன் நுழையப்போகிறார். தனுசு ராசிக்கு சந்திராஷ்டம் இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என தெரிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி மாதத்தின் கடைசி செவ்வாய்கிழமை, வாரத்தின் இரண்டாவது நாள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு எப்படியிருக்கும் என பார்க்கலாம்.

மனோகாரகன் சந்திரன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு இன்றைய தினம் மாறுகிறார். கடகத்தில் ராகு உடன் சந்திரன் இணைவதால் நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளது. பிற்பகலுக்கு மேல் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது என்பதால் வாயை மூடி பேசவும், மவுனமே நல்லது.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் தனது வீடான கடகத்தில் சஞ்சாரிக்கப் போகிறார். ராசிக்கு நான்காவது இடத்தில் மனோகாரகன் சந்திரன் பயணிக்கிறார். தாயாருடன் வாக்குவாதம் ஏற்படும்.
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரர்களுக்கு நெருக்கமாவீர்கள். ராசி எண்: 9 ராசி நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 3வது இடத்தில் பிற்பகல் முதல் சந்திரன் சஞ்சாரிக்க உள்ளார். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விறுவிறுவென விரைந்து முடிப்பீர்கள். ராசி எண்: 4 ராசியான நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு

மிதுனம்

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் பிற்பகல் வரை இருப்பதால் உணர்ச்சி வசப்பட வேண்டாம். பிற்பகலில் இரண்டாம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. ராசி எண்: 5 ராசியான நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை

கடகம்

கடகம்

இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் நுழைகிறார். சற்றே சோம்பலாக இருக்கும். சின்னச் சின்ன சுப விரையம் ஏற்படும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். ராசி எண்: 6 ராசியான நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்

கன்னி

கன்னி

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் வருவதால் பணவரவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். ராசி எண்: 8 ராசியான நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்

துலாம்

துலாம்

ராசிக்கு பத்தாவது இடத்தில் சந்திரன் இன்று நுழைகிறார். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோக ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதால் அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ராசி எண்: 6 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம்

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 8வது இடத்தில் உள்ள சந்திரன் பிற்பகலில் 9வது இடமான கடகம் ராசிக்குள் நுழைகிறார். மதியம் வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். உங்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகளை போராடி முடிப்பீர்கள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு,கிரே

தனுசு

தனுசு

ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் நுழைவதால் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கணவன்மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உதவுவார். ராசி எண்: 5 ராசியான நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை

மகரம்

மகரம்

ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் நுழைவதால், வியாபாரத்தில் லாபம் வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். ராசி எண்: 1 ராசியான நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்

கும்பம்

கும்பம்

ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் நுழைகிறார். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும். ராசிஎண்: 9 ராசியான நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை

மீனம்

மீனம்

ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் நுழைகிறார். இன்றைய தினம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ராசி எண்: 3 ராசியான நிறங்கள் அடர் சிவப்பு,இளம்மஞ்சள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+