இன்று சந்திரகிரகணம்: கடகம், தனுசு மவுன விரதம் இருக்கலாம் - 12 ராசிக்கும் பலன்கள்
கடக ராசியில் இன்றைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைக்கு பலன் எப்படி என்று அறிந்து கொள்வோம்.
Recommended Video

சென்னை: ஜனவரி மாதத்தின் கடைசி நாள் கடைசி புதன்கிழமை, வாரத்தின் 3வது நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு எப்படியிருக்கும் என பார்க்கலாம்.
மனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ராகு உடன் சந்திரன் இணைந்து பயணிக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். கடகராசியில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
கடக ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் பூசம், ஆயில்யம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

மேஷம்
இன்றைய தினம் ராசிக்கு நான்காவது இடத்தில் மனோகாரகன் சந்திரன் பயணிக்கிறார். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. 10வது வீட்டில் 4 கிரகங்கள் அமர்ந்துள்ளன. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இன்றைக்கு அலுவலகத்தில் அமைதி நிலவும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ஊதா,பிங்க்

ரிஷபம்
ராசிக்கு 3வது இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். இன்றைய தினம் சந்திரன் சாதகமாக உள்ளதால் எடுத்த கரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ராசி எண்: 1 ராசியான நிறங்கள்: ப்ரவுன்,கிரே.

மிதுனம்
ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார். இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கும். மன நிம்மதி ஏற்படும். அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரி மதிப்பார். ராசியான எண்: 8 ராசி நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு

கடகம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார். நிதானத்துடன் செயல்பட வேண்டும். சந்திர கிரகணமும் உங்கள் ராசியில் நிகழ்வதால் சற்றே நிதானம் தேவை. மறதியால் பிரச்னைகள் வந்து போகும். வீட்டில் தம்பதியர் வீண் சந்தேகம் வந்து விலகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். மவுன விரதம் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை இன்றைக்கு யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: வெள்ளை,நீலம்

சிம்மம்
ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். வேலைச்சுமை அதிகரிக்கும். பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்

கன்னி
ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் ராகு உடன் அமர்ந்துள்ளார் பணவரவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு இரண்டாவது இடத்தில் அமர்ந்துள்ளார். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்

துலாம்
ராசிக்கு பத்தாவது இடத்தில் சந்திரன் உள்ளதால் புது வேலைக்கு முயற்சி செய்யலாம். ஜென்மகுரு ஒரு தடுமாற்றத்தை தருவார். செவ்வாய், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நன்மையே நடக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோக ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதால் அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ராசியான எண் 1, ராசியான நிறம் மெரூன்.

விருச்சிகம்
ராசிக்கு 9வது இடமான கடகம் ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திரன் சாதகமாக உள்ளதால் தாய்வழி ஆதரவு உண்டு. அப்பாவின் உடல் நலம் சீராகும். 12வது இடத்தில் குரு விரையத்தை தருவார். 2ஆம் வீட்டில் சனி இருப்பதால் காரியங்கள் இழுபறியாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் 4 கிரகங்கள் அமர்ந்துள்ளதால் தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். ராசி எண்: 9 ராசியா நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு.

தனுசு
ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் உங்களுக்கு சந்திராஷ்டமம். சந்திர கிரகணத்தில் சந்திராஷ்டமம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பேசுவதை விட மவுனவிரதம் நல்லது. சின்னச்சின்ன உடல் நலக்குறைவுகள், அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம், ஜாமீன் கையெழுத்து வேண்டாம். பொறுமையாக இருக்கவும், விட்டுக்கொடுக்கவும். குறைவாக சாப்பிடவும். பணியிடங்களில் வரும் பிரச்சினைகளை பொறுமையாக சமாளியுங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. ராசி எண்: 2 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்

மகரம்
ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் வியாபாரத்தில் லாபம் வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வளைந்து கொடுத்து காரியம் சாதிப்பீர்கள். ராசியில் 4 கிரகங்கள் அமர்ந்துள்ளதால் தடுமாற்றம் ஏற்படும். 10ல் குரு உள்ளதால் எதிர்காலத்தில் பயம் வரும். ராசிநாதன் சனிபகவான் 12ல் மறைந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யவும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: மஞ்சள்,பிங்க்

கும்பம்
ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்

மீனம்
ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் பணவரவு அதிகரிக்கும் காரணம் லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் உள்ளதால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். 9வது வீட்டில் சனி அமர்ந்துள்ளதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை.












Click it and Unblock the Notifications