மேஷ ராசிக்காரர்களே புது பொறுப்பு தேடி வரும் - 12 ராசிக்கும் இன்று பலன்கள்

பிப்ரவரி 7ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைக்கு பலன் எப்படி என்று அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உங்கள் ராசிப்படி நீங்கள் இந்த பழக்கத்தை விட வேண்டும்...வீடியோ

    சென்னை: துலாம் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு 12 ராசிக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

    மகரத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய், கும்பம் ராசியில் சுக்கிரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    மீனம் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது.

    மேஷம்

    மேஷம்

    ராசிக்கு ஏழாவது இடத்தில் சந்திரன் குரு உடன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் உற்சாகமாக இருக்கும். வீட்டில்

    விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சனி பகவான் 9வது வீட்டில் அமர்ந்துள்ளதால் இன்றைக்கு வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். 10ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: அடர் சிவப்பு, வெள்ளை

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்கு ஆறாவது வீட்டில் குருவும் சந்திரனும் மறைந்துள்ளனர். இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். 10வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 9வது வீட்டில் முன்று கிரகங்கள் அமர்ந்துள்ளதால் வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். 7வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அலுவலகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். ராசியான எண்: 7

    ராசியான நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் குரு உடன் அமர்ந்துள்ளார். நீங்கள் போடும் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 7வது வீட்டில் சனி பகவான் அமர்ந்துள்ளார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: பச்சை, பிங்க்

    கடகம்

    கடகம்

    ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் குரு உடன் அமர்ந்துள்ளதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. ஏழாவது வீட்டில் கேது உடன் சூரியன், புதன் அமர்ந்துள்ளனர். இன்றைய தினம் பால்ய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சுக்கிரன் 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். 5வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, வெள்ளை

    சிம்மம்

    சிம்மம்

    ராசிக்கு 3வது இடமான முயற்சி ஸ்தானத்தில் மனோகாரகன் சந்திரன், குரு உடன் இணைந்து அமர்ந்துள்ளார். இன்றைய தினம் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் இன்றைக்கு புது வண்டி வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

    கன்னி

    கன்னி

    ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப ஸ்தானத்தில் உள்ள சந்திரன், குரு பகவானால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். 3வது வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாயினால் முயற்சிகள் வெற்றியடையும். இன்று உங்களின் தோற்றப் பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ரோஸ், வைலெட்

    துலாம்

    துலாம்

    ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித பதற்றம் படபடப்பு குடியேறும். இன்றைக்கு தன்னம்பிக்கை குறையும். இரண்டாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தாலும் குடும்ப செவ்வாய் வீட்டில் சில பிரச்சினைகளை உருவாக்குவார். இன்றைக்கு உங்களிடம் உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். அலுவலகத்தில் எதிர்த்து பேச வேண்டாம். நீங்கள் செய்யும் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன், குரு மறைந்துள்ளதால் இன்றைக்கு விரைய செலவுகள் அதிகம் வரும். 4வது வீட்டில் சுக்கிரன் குடியேறி உள்ளதால் வீட்குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். ராசிக்குள் செவ்வாய் அமர்ந்துள்ளதால் சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல்களை தவிர்க்கவும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

    தனுசு

    தனுசு

    ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு உடன் இணைந்து அமர்ந்துள்ளார். இன்றைக்கு
    குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

    மகரம்

    மகரம்

    ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் ஏற்கனவே குருவும் அமர்ந்துள்ளார். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். கணவன் மனைவி இடையே உற்சாகம் பிறக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். குடும்பத்தினரை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். ராசியான எண் - 2 ராசியான நிறம் - இளஞ்சிவப்பு

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 9வது வீட்டில் குரு உடன் சந்திரன் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சம். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். சுக்கிரன் ராசியில் அமர்ந்துள்ளார் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

    மீனம்

    மீனம்

    நாளை காலை வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எச்சரிக்கை தேவை. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+