ரிஷபத்திற்கு காதல் சிறகடிக்கும் நாள்... மீனத்திற்கு சந்திராஷ்டமம்
இன்றைய தினம் துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
சென்னை: துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் சந்திரன். தனது ஏழாவது பார்வையாக மேஷம் ராசியை பார்க்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
இன்றைய தினம் கடகத்தில் ராகு, துலாமில் குரு, சந்திரன், விருச்சிகத்தில் செவ்வாய், தனுசில் சனி, மகரத்தில் கேது, கும்பத்தில் சூரியன், மினத்தில் சுக்கிரன், புதன் என கிரக நிலைகள் அமைந்துள்ளன.
மீனம் ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திராஷ்டமம் என்பவதால் கவனம் தேவை.

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். வீட்டில் குடும்பத்தில், அலுவலகத்தில் இன்று யாருடனும் சிடுசிடுப்பாக பேச வேண்டாம். கூட்டுத் தொழில் தொடங்க நல்ல நாள்தான் என்றாலும் சரியான கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்கவும். முதலீடு செய்யும் முன் யோசிக்கவும். மகிழ்ச்சிகரமான நாள். இன்று எதிர்பாராத விருந்தினர் வருவார்கள். மொத்தத்தில் இன்றைய தினம் இனிமையாகவே இருக்கும். ராசியான எண் 5, ராசியான நிறம் சிவப்பு.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் காதல் வானில் சிறகடிப்பீர்கள் தம்பதியரிடையே காதல் உணர்வு அதிகரிக்கும். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று குடும்பத்தோடு பாடி மகிழ்வீர்கள். ஆனந்தம் ஆனந்தம் பாடும், மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும் என்பது போல பாக்கெட்டில் பணம் நிறையும் நாள் இது. பணி செய்யும் இடத்தில் மூடு அப்செட் ஆக வாய்ப்பு உள்ளது டேக்இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளவும். ராசியான எண் 4 ராசியான நிறம் இளம் மஞ்சள்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். முத்துக்கு முத்தாக என்று உற்சாகமாக கொண்டாடுவீர்கள். காதல் வானில் இன்று நீங்கள் சிறகடித்து பறப்பீர்கள். குழந்தைகளுடன் இன்று ஆனந்தமாக பொழுதை செலவு செய்வீர்கள். புதிய முயற்சிகள் கைகூடி வரும். தேவையற்ற நட்புகளை வெட்டி விடுங்கள். களைகளை களையெடுத்தால் நல்ல செடிகள் வளர்ந்து செழிக்கும். ராசியான எண் 3, ராசியான நிறம் பச்சை.

கடகம்
ராசிக்கு 4வது வீட்டில் குருவுடன் சந்திரன் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். கூடவே இருக்கும் சிலர் எதையாவது பேசி டென்சனை ஏற்படுத்துவார்கள். எதையும் காதில் போட்டுக்கொண்டு மூளையில் ஏற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். தம்பதியர்களிடையே இன்று ரொமான்ஸ் பாதிக்கும் ஆனாலும் சமாளிக்கலாம். ராசிக்கு 6வது வீட்டில் சனி அமர்ந்துள்ளார். எதிரிகளை சமாளிக்கும் நாள், வருமானம் இன்றைக்கு கையில வாங்கினேன் பையில போடலை என்பதுபோலத்தான் இருக்கும். ராசியான எண் 6, ராசியான நிறம் இளம் மஞ்சள்.

சிம்மம்
ராசிக்கு மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். ஏற்கனவே மூன்றாவது வீட்டில் குருவும் அமர்ந்துள்ளார். இன்றைக்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். ஹேப்பி இன்று ஹேப்பி என்று உற்சாகமாக கொண்டாடும் அளவிற்கு உடல்நலம் சீராக இருக்கும். பணவரவு அதிகரிக்கும், காதலி, வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவழியுங்கள். இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமையும். ராசியான எண் 7, ராசியான நிறம் மஞ்சள்.

கன்னி
ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தினம் தினம் தீபாவளி என்று மகிழ்ச்சியாக பாடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தில் சற்றே குதூகலம் குறையும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாளாக அமையும். வீட்டில் மனைவியிடத்தில் கடுமையாக பேசி சண்டை போட வேண்டாம். ராசியான நிறம் 5, ராசியான நிறம் இளம் பச்சை.

துலாம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். காதலில், குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். ஒருமுறைக்கு இருமுறை எதையும் உறுதி செய்து பேசவும். உடல் நலம் இன்றைக்கு ஆரோக்கியமாகவே இருக்கும். பணியிடத்தில் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். ராசியான எண் 4, ராசியான நிறம் சிவப்பு.

விருச்சிகம்
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்தான் என்றாலும் அலுவலகத்தில் சற்று கொதிநிலையுடன் காணப்படுவீர்கள்.உங்களோட பொறுமையை சோதிக்கும் வகையில் யார் என்ன பேசினாலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். உங்களின் டென்சனை குறைக்கும் வகையில் வாழ்க்கை துணை செயல்படுவார் என்பதால் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். ராசியான எண் 8, ராசியான நிறம் கிரே.

தனுசு
ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள், கழுத்து வலி, தோள்வலி அதிகரிக்கும் ஆனாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமாக நேரத்தை செலவு செய்தாலும் பணியிடத்தில் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். இன்றைய வேலையை உடனே முடித்து விட்டால் மேனேஜரின் குட் புக்கில் இடம் பெறலாம். இல்லை எனில் நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். பல பகுதிகளில் இருந்து வந்து பணம் பாக்கெட்டை நிரப்பும். ராசியான எண் 7, ராசியான நிறம் வெள்ளை.

மகரம்
இன்றைய தினம் ராசிக்கு 10வது இடமான உத்யோக ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பண வருவாய் அதிகரிக்கும், பணியிடத்தில் பம்பரமாக சுழன்று வேலை செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் காதலில் திளைப்பீர்கள். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று பாடும் நாள் இது என்றாலும் உடல் நலம் ஒத்துழைப்பு கொடுக்காது. அசதியாக இருக்கும். ராசியான எண் 6 ராசியான நிறம் புளூ

கும்பம்
ராசிக்கு 9வது வீட்டில் இன்றைய தினம் சந்திரன் அமர்ந்துள்ளார். தர்ம ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளது தந்தையின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். சக்தியை சேமித்து வைத்தது போல செலவு செய்ய வேண்டும். இன்றைக்கு வருமானம் அதிகரிக்கும் வந்த பணத்தை சேமிப்பது முக்கியம். காதலி, அல்லது மனைவி, வாழ்க்கை துணையுடன் உற்சாகமாக நேரத்தையும், பணத்தையும் செலவு செய்வீர்கள். ராசியான நிறம் 3, ராசியான நிறம் நீலம்.

மீனம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். சந்திராஷ்டமம் என்பதால் வாயை மூடி பேசவும். மவுனமே சிறந்த வழியாகும். அலுவலத்திலோ, வீட்டிலோ டென்சன் அதிகரிக்கும் எனினும் சமாளியுங்கள். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் இனிமையான நாளாகும். வருமானம் இன்றைக்கு சுமாராகவே இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. ராசியான எண் 6, ராசியான நிறம் ஆரஞ்ச்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications