ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
சென்னை: ஒருவர் பிறந்த நேரம் தேதி, இடம் இதை எல்லாம் பொறுத்து ராசி, நட்சத்திரம் மாறும். அந்த வகையில் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்கள் வருகின்றன. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த 3 நட்சத்திரங்களில் எதாவது ஒன்று இருக்கும்.
இந்த 3 நட்சத்திரங்களுக்கும் சேர்த்து உங்களுடைய வாழ்நாள் ராசி பலன் எப்படி இருக்கும் என்று இங்கே கொடுத்து உள்ளோம். உங்கள் வயது ரீதியாக ஒரு சில வருடங்களாக பிரித்து எளிமையாக கொடுத்து உள்ளோம்.
சிலருக்கு இந்த முடிவுகள் பொருந்தாமல் போகலாம். காரணம் அவர்களின் தனிப்பட்ட ஜாதக கிரக நிலை, அவர்களின் பெயர்கள் என்று பல விஷயங்கள் காரணமாக முடிவுகள் கொஞ்சம் மாறலாம். மேஷ ராசியின் 3 நட்சத்திரங்களின் வாழ்நாள் ராசி பலனை இங்கே பார்க்கலாம்.

0-10 வயது - நீங்கள் பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்திருக்க மாட்டீர்கள். வசதியான குடும்பமாக இருந்தாலும் போக போக அந்த குடும்பங்கள் செல்வத்தை இழந்து இருக்கும். அல்லது இப்போதுதான் பிறந்த குழந்தை என்றால் மேஷ ராசிதாரர்களின் பெற்றோர் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிறைய அண்ணண் தங்கைகள் இருப்பார்கள்.
10- 20 வயது - உங்களுக்கு நன்றாக படிப்பு வரும். கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மேஷ ராசிதாரர்கள் அதிகமாக கல்லூரி முடித்தவர்களாக இருப்பார்கள்.
20-25 வயது - உங்கள் ராசிக்கு அரசு வேலை இந்த வயதில் வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் மேஷ ராசிதாரர்களுக்கு தனியார் வேலை கிடைக்காது. தனியார் வேலை கிடைத்தாலும் அதில் நீடிக்க வாய்ப்பு இல்லை. அரசு வேலைக்கு முயன்றால் கண்டிப்பாக கிடைக்கும்.
30-35 வயது - இந்த காலத்தில் மன ரீதியாக அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த காலத்தில்தான் உங்களுக்கு திருமணம் நடக்கும். நீங்கள் ஒருதலையாக காதலித்த பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம். ஆனால் அதற்கு கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். மன ரீதியாக கடுமையான அழுத்தத்தில் இந்த காலத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
40-45 வயது - நீங்கள் பொருளாதார ரீதியாக கொஞ்சம் முன்னேற்றம் அடைவீர்கள். பைக், கார், டிவி என்று சொந்தமாக வாங்குவீர்கள். பணம் நிறைய வரும். தங்கம் வாங்கும் வாய்ப்புகளும் உண்டு.
45- 55 வயது - இந்த காலகட்டத்தில் தேவையின்றி கடன் அதிகம் வாங்கிவீர்கள். உங்களின் கடனே உங்களை கடும் ஏழ்மைக்கு தள்ளும். ஊரார் உங்களை மிக மோசமாக பேசும் நிலைக்கு கொண்டு செல்வீர்கள். வீட்டை காலி செய்யும் நிலை ஏற்படும். நிலத்தை விற்கும் நிலை ஏற்படும். உங்களின் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நடந்தால் கூட அது பிரச்சனையில் முடியும்.
55-65 வயது - 10 வருட கஷ்டங்கள் சரியாகும். நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனை இருக்காது. இந்த தமிழ் புத்தாண்டில் உங்களுக்கான இந்த பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை. நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும்.
65-75 வயது -உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும். வயிற்று ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி வரும்.












Click it and Unblock the Notifications