வைகாசி மாத ராசி பலன் 2023: ரிஷபத்திற்கு மாறும் சூரியன்..6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்
சென்னை: வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்வதால் ரிஷப மாதம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் பல தெய்வ அவதாரங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளாக ஆறுமுகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்கள் கை தவழ்ந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க வைகாசி மாதத்தில் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கடக ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார். வைகாசி 24ஆம் தேதி புதன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் நிற்கும் சுக்கிரன் 16ஆம் தேதி கடக ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் இடம் மாற்றம் யாருக்கு யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
அரசாங்க கான்ட்ராக்ட்களை சுலபமாக அடைவீங்க. தைரியமாக நிலத்தில் முதலீடு செய்வீங்க. கார் வாங்குவீங்க. சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீங்க. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போய் மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. வெளிநாடு செல்வதற்கான ஏற்பாட்டில் வெற்றி பெறுவீங்க. காதலியின் அன்பை பெறுவதற்காக கடுமையாக பாடுபடுவீங்க. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமுங்க. மருத்துவப் படிப்பில் பிள்ளையை சேர்த்து விடுவீங்க. தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீங்க.திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்:கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நெருக்கமான நண்பர்களிடம் தேவையில்லாமல் சண்டை போடாதீங்க மேல்படிப்புக்காக குழந்தையை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீங்க. நீண்ட காலமாக விரும்பிய பெண்ணை கன்னி வைத்து வளைத்து பிடிப்பீங்க. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்க. அரசாங்கத்தில் எதிர்பார்த்த வேலைகள் தடையில்லாமல் நடக்குமுங்க. வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படுதுங்க. எதிர்ப்புகளை புத்திசாலித்தனமாக முறியடிப்பீங்க. நீண்ட காலமாக முயற்சி செய்த அரசாங்க வேலை கிடைக்குமுங்க. தொழிலில் பொருளாதார முன்னேற்றம் அடைவீங்க. மகளுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுப்பீங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.
மிதுனம்:எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
ஆடம்பரமாக செலவு செய்வதை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீங்க. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்ங்க. ஒதுங்கி போன உறவினர்களை ஒன்று சேர்க்க பிரயாசைப்படுவீங்க. தாயாரின் சர்க்கரை நோய்க்கு மருத்துவரை நாடி சிகிச்சை செய்வீங்க. கோயில் திருப்பணிகளுக்காக நன்கொடை கொடுப்பீங்க. நல்ல காரியங்கள் செய்து வெளிவட்டார செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுவீங்க. முக்கியமான கட்டத்தில் சகோதரருக்கு பண உதவி செய்வீங்க. வாஸ்து நாளில் வீடு கட்ட பூமி பூஜை போடுவீங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீங்க. தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீங்க.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்:வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
மனைவியோடு தேவையில்லாமல் மல்லுக்கட்டாதீங்க. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கொடுக்காதீங்க. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவைங்க. சின்ன விபத்து நடக்க வாய்ப்பு இருக்குங்க. வேலை இடத்தில் கவனக்குறைவா இருக்காதீங்க. மேல் அதிகாரியின் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திப்பீங்க. மனதுக்குப் பிடித்தவளின் மனதை நோகடிக்காதீங்க. பிள்ளைகளுக்காக கல்வி கடனுக்கு விண்ணப்பம் செய்வீங்க. அரசாங்க ஊழியர்களுக்கு வேலை மாறுதல் கிடைக்குமுங்க. சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுமுங்க.
சிம்மம்:அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
தந்தை யார் சொல்வதை தட்டிக் கழிக்காமல் கீழ்ப்படிந்து நடப்பது நல்லதுங்க. கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனை தலை தூக்குமுங்க. அதை புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துங்க. புதிய தொழில்களில் அதிக முதலீடு செய்ய வேண்டாமுங்க. வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீங்க. எதிர்பார்த்த கடன் உதவி கிடைப்பதில் தாமதப்படுமுங்க. அரசு ஊழியர்கள் வேலைச்சுமையால் அவதிப்படுவீங்க. இடையூறாக இருந்த எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தில் வெற்றி பெறுவீங்க. வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தந்தையாரின் உடல் ஆரோக்கிய பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு செல்வீங்க. யாருக்கு பணம் கொடுத்தாலும் எழுதி வாங்க மறக்காதீங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி:அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை அறவே நிறுத்துவது நல்லதுங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. மேலும் புதிய வீடு கட்டுவதற்கு பிளான் போடுவீங்க. குடும்பத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மறக்காதீங்க. ஏட்டிக்கு போட்டியாக பேசி மனைவியோடு குஸ்தி போடாதீங்க. குழந்தைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கவனிக்க தவறாதீங்க. மனக்கஷ்டப்படும்படியான காரியத்தில் பிள்ளைகள் கவனம் போகலாமுங்க. கட்டுமான ஊழியர்கள் கவனமாக வேலை பார்ப்பது முக்கியமுங்க. கைகளில் அடிபடுவதற்கு வாய்ப்பு உண்டுங்க. தொழில் காரணமாக வெளியூர் பயணம் போவீங்க. சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக இருங்க. வயிற்றுப் பிரச்சனைக்காக வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை உருவாகுமுங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி












Click it and Unblock the Notifications