வைகாசி மாத ராசி பலன் 2023: 6 ராசிக்காரர்களை இனி அசைக்க முடியாது..திடீர் யோகம் வீடு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்வதால் ரிஷப மாதம் என்று அழைக்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் பல தெய்வ அவதாரங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளாக ஆறுமுகப்பெருமான் அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறி கார்த்திகை பெண்கள் கை தவழ்ந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க வைகாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Vaikasi Matha Rasi Palan 2023: Vaikasi month rasi palan Thulam to Meenam prediction

வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கடக ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் மேஷ ராசியில் அமர்ந்திருக்கிறார். வைகாசி 24ஆம் தேதி புதன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் நிற்கும் சுக்கிரன் 16ஆம் தேதி கடக ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் இடம் மாற்றம் யாருக்கு யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்:தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...

கல்யாண ஏற்பாடு செய்த மகளால் களங்கத்தை சுமக்க வேண்டிய அவல நிலை உண்டாகுமுங்க. எந்த காரியத்தையும் நிதானமாக செய்வது நல்லதுங்க. வியாபாரம் சிறப்பாக நடக்குமுங்க. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்க தாமதமாகுமுங்க. நண்பர்களின் உதவியால் புதிய தொழிலுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுவீங்க. அரசு ஊழியர்கள் வேலை திறனை வெளிப்படுத்துவாங்க. மேலதிகாரிகளின் ஊக்கம் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்குமுங்க. மனைவிக்கு மருத்துவச் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகுமுங்கு. வியாபாரம் காரணமாக குடும்பத்தை விட்டு சில காலம் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்ங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

Vaikasi Matha Rasi Palan 2023: Vaikasi month rasi palan Thulam to Meenam prediction

விருச்சிகம்:போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...

விருப்பப்பட்டு வாங்கிய நிலத்தில் ஏற்பட்ட வில்லங்கத்தால் கோர்ட் படி ஏற வேண்டிய நிலை உண்டாகுமுங்க. ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளை வீட்டில் ஏற்பாடு செய்வீங்க. பிள்ளைகளின் படிப்புக்காக திட்டம் போடுவீங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மனைவியின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீங்க. காதலை வெளிப்படுத்த பலவகையில் முயற்சி செய்வீங்க. அதற்கான பலனையும் பெறுவீங்க. புதிய ஆர்டர்களை பெறுவதற்காக வெளியூர் போவீங்க. தொழில்துறையில் சின்ன சின்ன இடையூறுகளை சந்திப்பீங்க. வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீங்க. பழைய கடன்களை அடைக்க கடுமையாக முயற்சி செய்வீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு:வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...

பிள்ளைகளின் நடவடிக்கையால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும்ங்க. கோயில் திருப்பணிக்காக பண உதவி செய்வீங்க. கட்டுமான துறையில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. அரசாங்க காண்ட்ராக்ட்களை பெறுவதற்கு அரசியல்வாதி ஒருவர் உதவி செய்வாருங்க. தாயாரின் குதிகால் வலிக்கு எக்ஸ்ரே எடுப்பீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக வருமானம் பார்ப்பீங்க. ஆன்லைன் வர்த்தகங்களும் உங்களுக்கு அனுகூலமாக இருக்குமுங்க. வியாபாரத்துல சில வில்லங்கம் வந்தாலும் அதைத் தாண்டி வெற்றிகரமா நடத்துவீங்க. உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்குமுங்க. புதிய வீடு மாறுவீங்க. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமுங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

Vaikasi Matha Rasi Palan 2023: Vaikasi month rasi palan Thulam to Meenam prediction

மகரம்:வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....

குடும்பத்துல ஏற்படுற சிக்கல தீர்க்க முடியாமல் தடுமாற்றம் அடைவீங்க. மோசமான கனவுகள் வந்து தூக்கத்தை கெடுக்குமுங்க. அதற்காக குலதெய்வம் கோயிலுக்கு போய் வழிபாடு செய்வீங்க. உங்கள் பெயரைக் கெடுக்க ஒரு கூட்டம் வேலை செய்யுதுங்க. எச்சரிக்கையா அடையாளம் பார்த்து அதை சரி செய்ய மாற்று ஏற்பாடு பண்ணுங்க. காதலியோடு ஊட்டி, கொடைக்கானல் என்று உல்லாச பயணம் போவீங்க. பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பணம் சேர்ப்பதில் அக்கறையாக இருப்பீங்க. மனைவி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி படுத்துவீங்க. வேலை இடத்தில் சக ஊழியர்களோடு ஒத்துப் போவீங்க. அனாவசியமாக கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.

கும்பம்:சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இதயம் கலங்க மாட்டீங்க. எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. ஊக்கத்துடன் வேலை பார்த்து வியாபாரத்தை முன்னேற்றமான நிலைக்கு கொண்டு வருவீங்க. பேசி முடித்த கல்யாணம் ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிப் போகுமுங்க. வெளியூர் பயணங்களில் திட்டமிட்ட காரியங்களை தடையில்லாமல் செய்து முடிப்பீங்க. அலைச்சல் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வு ஏற்பட்டு தூக்கத்தை தொலைப்பீங்க. பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுத்து பிரமிக்க வைப்பீங்க. வீட்டு மனை வியாபாரத்தில் தனித்தன்மையுடன் திறமையை வெளிப்படுத்துவீங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.

Vaikasi Matha Rasi Palan 2023: Vaikasi month rasi palan Thulam to Meenam prediction

மீனம்:பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...

சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு கொந்தளிக்காதீங்க. அது உடல் நலத்தை கெடுக்குமுங்க. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. காப்பாற்ற முடியவில்லை என்றால் அவமானப்படுவீங்க. நீண்ட காலமாக வரன் தேடிய மகனுக்கு ஒரே நாளில் திருமண பேச்சுவார்த்தையை முடிப்பீங்க. பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து நடந்து உறவினர்கள் மத்தியில் உறவை பலப்படுத்துவீங்க. வாகனங்களில் போகும்போது செல்போனை உபயோகப்படுத்தாதீங்க. விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகுமுங்க. தொழிலில் நல்ல லாபம் கிடைக்குமுங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீங்க. கடுமையாகப் பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீங்க. அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையுமுங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+