வாஸ்து டிப்ஸ்.. புது கார் வாங்கப்போறீங்களா? மறந்தும் கூட கார் ஷெட் இந்த திசையில் கட்டாதீர்கள்
சென்னை: புது வீடு கட்டியிருப்பவர்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை எப்படி பின் பற்ற வேண்டுமோ அதே போல கார் ஷெட் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரப்படி சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கார் ஷெட்டின் நுழைவுப் பகுதி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டுமாம். நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வகையில் வெளிர் நிறங்களை கார் ஷெட்டிற்கு பூசுவது நல்லது.
சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் கார், மோட்டர் பைக் போன்ற வாகனங்களை வாங்குவார்கள். கார் நிறுத்துவதற்கு எந்த திசை சிறந்தது. கார் ஷெட் எந்த பகுதியில் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வடகிழக்கு மூலை எனப்படும் ஈசான்யம் பகுதியில் எந்த ஒரு கனமான பொருளையும் வைக்கக்கூடாது. மறந்தும் கூட கார் பார்க்கிங்கை ஈசான்யம் பகுதியில் அமைக்க வேண்டாம் என்று பொதுவான வாஸ்து விதியாக சொல்லப்படுகிறது.
ஒரு சிலர் தங்களின் தலைவாசலை ஈசன்யம் பகுதியில் அமைத்திருப்பார்கள். அந்த பகுதியிலேயே போர்டிகோ அமைத்து கார் பார்க்கிங் வைத்திருப்பார்கள். அது தவறான செயல் ஈசான்யம் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதை தவிர்ப்பது நல்லது என்று வாஸ்து சாஸ்திர படியும் ஆன்மீக ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது.
போர்ட்டிகோ அமைக்கும்போது வடக்கு, கிழக்கு திசையில் கார் நிறுத்துமாறு அமைப்பது சிறந்தது. தொழிலதிபர்கள் வடக்கு திசை நோக்கியும், அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் கிழக்கு திசை நோக்கியும் காரை நிறுத்துவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டின் நுழைவாயிலை பொறுத்து தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் கார் பார்க்கிங் அமைக்கப்படுவது நல்லதாம். மேலும், வடமேற்கு திசையில் காரை நிறுத்துவது விசேஷமாக சொல்லப்படுகிறது.
தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக கார் ஷெட் அமைக்க வேண்டும். தனியாக கார் ஷெட் அமைக்க இடவசதி இல்லாதவர்கள், போர்ட்டிகோவிலேயே காரை நிறுத்தினாலும், தனியாக பில்லர் போட்டு தனிக்கூரையுடன் அமைப்பது அவசியம் என்று வாஸ்து முறையில் சொல்லப்படுகிறது. வீட்டுடன் ஒட்டியிருக்காத வகையில் கார் ஷெட் அமைப்பதே நல்லது என்று வாஸ்து சாஸ்திர கூறப்பட்டுள்ளது. வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருக்கும் கேட்டுகளை விட கார் ஷெட்டின் கேட்டுகள் உயரம் குறைவாக அமைக்க வேண்டுமாம். அதேபோன்று, முழுமையாக திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுவதும் அவசியம்.
கார் ஷெட்டிற்கு வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர் வண்ணங்களை கார் ஷெட்டில் பூசுவதும் நல்லது அது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்குமாம். கருப்பு, சிவப்பு, சாம்பல் நிறம், அடர் நீலம் போன்ற நிறங்களை தவிர்த்து விட வேண்டும். கார் ஷெட்டில் தேவையற்ற பொருட்களையும், தீப்பற்றும் பொருட்களையும் வைக்க வேண்டாம். பெரிய கார் வைத்திருப்பவர்கள் தென்மேற்கு எனப்படும் கன்னி மூலை பகுதியில் கார்களை நிறுத்த ஷெட் அமைக்கலாம். தென்கிழக்கு பகுதியில் கார் ஷெட் அமைப்பதன் மூலம் சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பண வருமானமும் அதிகரிக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications