Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமண பொருத்தம் பார்க்கறீங்களா? .. "அந்த" பொருத்தம் ரொம்ப அவசியம்!

கல்யாணத்திற்கு பத்து பொருத்தம் பார்த்தும் பாதியிலேயே சிலர் பிரிந்து விடுகிறார்கள். அட போங்க சார் அந்த விசயத்தில திருப்தி இல்லையே என்று சொல்லிதான் பலர் வாழ்க்கையும் கோர்ட் வாசல் வரை வருகிறது. திருமண பொ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவைகளில் முக்கியமான பொருத்தங்கள் சரியாக அமையவேண்டும். மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத தவிர்க்கக் கூடாத பொருத்தம் யோனிப்பொருத்தம். மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது.

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம் முக்கியமானது. ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது.

அதே போல ரஜ்ஜுப்பொருத்தம் சரியாக அமைய வேண்டும். கணவன் மனைவி நீண்ட காலம் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் பாக்கியத்தை தரக்கூடியது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் தலை முதல் பாதம் வரை நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒரே ரஜ்ஜுவில் வரக்கூடாது. அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும்.

இருமணம் இணையும் விழா

இருமணம் இணையும் விழா

மனித வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு திருமணம். இரண்டு மனங்கள் இணையும் விழா மட்டுமல்ல அடுத்த சந்ததியை உருவாக்குவதற்காக ஆண் பெண் இணையும் விழா. இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. திருமணத்தின் மூலம் இரண்டு ஊர்களுக்கு இடையே பந்தம் உருவாகிறது. திருமணம் செய்து கொண்டவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை அதுவே கசப்பாக பிரிவில் முடியும் போது சொந்த பந்தங்களும் பிரிய நேரிடுகிறது.

பொருத்தம் அவசியம்

பொருத்தம் அவசியம்

திருமண காலம் வந்துவிட்டால் திருமணப் பொருத்தம் 10 மட்டும் பார்த்து திருமணத்தை முடிவெடுத்து விடக்கூடாது. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது பெரும்பாலானோர்கள் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்கின்றனர் இது தவறு ஜாதக ரீதியாகப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்.

வலிமையான கிரகங்கள்

வலிமையான கிரகங்கள்

ஜோதிடரீதியாக ஒருவருக்கு திருமண பாக்கியமானது அவர்களுடைய ஜாதகத்தில் இலக்கினத்திற்கு 7ஆம் பாவமும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஆணுக்கு செவ்வாய் பெண்ணுக்கு 7ல் அமையும் கிரகங்களின் நிலைகளைப் பொருது கணவன் மனைவி அமையும் நிலைகளை கண்டறிய முடியும். சந்திரன் எந்த ராசியில் எந்த வீட்டில் இருக்கிறார் என்று ஆராயவேண்டும். இவர்களின் வலிமை நிலைகளை ஆராயவேண்டும். இவர்களின் நிலைகளை நவாம்சத்திலும் ஆராய வேண்டும்.

தாம்பத்ய சுகம்

தாம்பத்ய சுகம்

தினப்பொருத்தம் மூலம் வரன்களின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி என்று பார்க்கலாம். கணப்பொருத்தம் குணாதிசயங்களை சொல்கிறது. மகேந்திரம் குழந்தை பாக்கியம் பற்றி சொல்லும், ஸ்தீரி தீர்க்கம் லட்சுமி கடாட்சம் பற்றி சொல்கிறது. யோனி பொருத்தம் தாம்பத்ய சுகம் பற்றியும், ராசி பொருத்தம் தம்பதியரின் உடல் நிலை பற்றியும் சொல்கிறது. ராசியதிபதி பொருத்தம் உறவுநிலை பற்றியும், வசியப்பொருத்தம் விருப்பு வெறுப்பு பற்றியும் சொல்கிறது. ரஜ்ஜூ பொருத்தம் தாலி பாக்கியத்தை குறிப்பிடுகிறது.

முக்கியமான பொருத்தம்

முக்கியமான பொருத்தம்

இந்த பத்து பொருத்தம் எல்லாருக்கும் அமையாது. 8 அல்லது 9 அமைவது உத்தமம். 5 முதல் 7 பொருத்தங்கள் அமைவது மத்திமம். கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம் முக்கியமானது. ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது.

களத்திர காரகன்

களத்திர காரகன்

இந்த நட்சத்திர பொருத்தங்களுடன் ஜாதக பொருத்தமும் அமைய வேண்டும். குடும்ப நலம் சொல்லும் 2ஆம் பாவம், 2ஆம் அதிபதி, சுகம் பற்றி சொல்லும் 4ஆம் 4ஆம் பாவ அதிபதி. களத்திர ஸ்தானமான ஏழாம் பாவம், ஏழாம் பாவக அதிபதி, களத்திர காரகன் ஆகியோரின் நிலையை ஆராய வேண்டும்.
தாம்பத்ய சுகம் தரும் 12ஆம் பாவமும், 12ஆம் பாவக அதிபதியும், 12ஆம் வீட்டில் இருக்கும் கிரகங்கள் பார்க்கும் கிரகங்களையும் ஆராய வேண்டும்.

மனோ காரகன் சந்திரன்

மனோ காரகன் சந்திரன்

மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். சனி வீட்டில் சுக்கிரன் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற வாழ்க்கை துணை அமைவார்கள். செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நலமற்ற மனைவி அமைவாள். இதனால் சுகம் பாதிக்கப்படும்.

குரு சுக்கிரன் நிலை

குரு சுக்கிரன் நிலை

ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும். பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும். குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
குரு தோஷம் உள்ளவர்களை சேர்த்து வைக்கக் கூடாது அதே போல சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும். சுக்கிரதோஷம் ஏற்பட்டிருந்தால் தவறான பாதையில் செல்ல வைத்து இல்லற வாழ்க்கை நாசமாக்கி விடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+