Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்

சுக்கிரன் காதல் நாயகன். கன்னி ராசியில் நீசம் பெற்ற நிலையில் இருந்து நகர்ந்து தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார். கடந்த ஒரு மாத காலமாக கன்னி ராசியில் சுக்கிரன் இருந்த போதும் ஆட்சி உச்சம் பெற்ற புதன் இருந்ததால் நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தார் சுக்கிரன். இப்போது புதன் துலாம் ராசிக்கு மாறிவிட்டதால் சுக்கிரன் நீசம் பெற்று செவ்வாய் சூரியனுடன் சேர்ந்திருக்கிறார். இன்னும் ஒரு நாள்தான் அக்டோபர் 4ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவ்யா யோகத்தையும் தரப்போகிறார்.

சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம், கும்ப ராசிகளில் நட்பு நிலையிலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். தனக்கு சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிக ராசியில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார். தனக்கு நிகரான பலம் வாய்ந்த, ஆனால் பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார்.

சுக்கிரன் அசுர குரு. யோகத்தையும் சுகத்தையும் தருவார் சுக்கிரன். அறுசுவை உணவை சுவைக்க வைப்பார். சொசுகு வாழ்க்கை வாழ வைப்பவர் அவர்தான். மாடி வீடு மெத்தை சுகம், கணவன் மனைவி சந்தோஷத்தையும் தரக்கூடியவர் அவரே. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருந்தால் போதும் அவருக்கு சந்தோஷங்கள் அபரிமிதமாக இருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் மறைமுகமான நோய்களை தருவார். சிலருக்கு பாலியல் தொடர்பான நோய்களும் ஏற்படும். கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏற்கனவே புத்தி நாதன் புதன் ஏழாம் விட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவது நன்மை தரும் அமைப்பாகும். புதன் சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுநாள்வரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி வெற்றிகரமாக முடிவடையும். தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். சந்தன பவுடரை வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு தானம் செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. அம்மன் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளிடம் இருந்த தடைகள் நீங்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. நண்பர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.வெளிநாடு பயணம் சென்று வர நல்ல சமயம் இதுவாகும். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அம்மா உடன் நெருக்கம் கூடும். நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். வம்பு வழக்கு பிரச்சினையால் அலைச்சல் அதிகமாகும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சர்க்கரை தானமாக தரலாம். சிவன் கோவிலுக்கு வெள்ளை மலர்களை கொடுக்க நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. உடல் நலனில் சின்னச் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்கள். வேலை விசயமாக சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குழந்தைகள் பிறக்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க மேலும் பல நன்மைகள் நடக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறுவதால் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

தனுசு

தனுசு

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க சுக்கிரன் பலம் அதிகமாகும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பத்துக்கு அதிபதி பத்தில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் உங்க சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். காதல் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். அப்பாவழியில் உதவி கிடைக்கும் கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். துர்க்கை அம்மனுக்கு குங்குமம் வாங்கிக் கொடுங்கள்.

மீனம்

மீனம்

உங்க ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக அமைப்பாகும். உங்க ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் உங்க ராசி லக்ன அதிபதிக்கு எதிரி. பகையாளி எட்டிற்கு உரியவன் எட்டில் மறையப்போவது ராஜயோகம்தான். இருந்தாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். வெள்ளிக்கிழமை பால் பாயாசம் குங்குமப்பூ சேர்த்து துர்க்கை அம்மனுக்கு படைக்கலாம். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+