• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்கிரன் பெயர்ச்சி 2019: துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறும் காதல் நாயகன்

|

சென்னை: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார். இதுநாள் வரை துலாம் ராசியில் சஞ்சரித்த சுக்கிரன் புத்தாண்டின் முதல்நாள் ஜனவரி 1 முதல் நீர் ராசியான விருச்சிகத்திற்கு இடம் பெயர்கிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. களத்திரகாரகன் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசியின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில் நிகழ உள்ள சுக்கிர பெயர்ச்சி எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறலாம். பசுவிற்கு அகத்திக்கீரை அளிக்கதானம் செய்யலாம்.

ரிஷபம்

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். செவ்வாய்கிழமைகளில் துர்க்கா தேவியை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்கலாம்.

கடகம்

கடகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது வருமானத்திற்காக மாதம் இது. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது விரலில் வைர மோதிரம் அணியலாம்.

கன்னி

கன்னி

ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தரலாம்.

துலாம்

துலாம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் காலமிது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குரு உடன் குடியேறியுள்ளார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

காதல் ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வெள்ளியில் ஓபல் ரத்தினக்கல் பதித்த மோதிரத்தை அணிய நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தரலாம்.

மீனம்

மீனம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

 
 
 
English summary
Venus transit scorpio on 1 January 2019 know what effects in your zodiac sign horoscope. Venus is considered as the feminine planet in Vedic astrology. This planet also showers effects on pleasure, luxuries and wealth in one’s life.Venus significantly tells about relationships, marriages, and children and also holds a significant effect on the same.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more