சுக்கிரன் பெயர்ச்சி: கடகத்தில் அமரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்
சுக்கிரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். ஜூன் 9ஆம் தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு இடம் பெயரும் சுக்கிரனால் 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
சென்னை: காதல் நாயகன் சுக்கிரன் கடக ராசியில் ராகு உடன் குடியேறப் போகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
கடக ராசி நீர் ராசி. இந்த ராசியில் ஏற்கனவே ராகு பகவான் அமர்ந்திருக்க இப்போது மிதுனம் ராசியில் உள்ள சுக்கிரன் சனிக்கிழமை முதல் கூட்டுக்குடித்தனம் நடத்தப் போகிறார்.
சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி.இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. இந்த சுக்கிரப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம், பாதகம் என பார்க்கலம்.

மேஷம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் மல்லிகை மலர்களை சூட மேலும் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் இருந்த ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபடலாம்.

மிதுனம்
சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் சஞ்சாிக்கப் போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிவபெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் தயிர் அபிஷேகம் செய்ய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடக்கும்.

கடகம்
காதல் நாயகன் சந்திரன் ஜென்ம ராசியில் குடியேறப்போகிறார். தங்க நகைகள் வாங்கலாம். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற நன்மைகள் அதிகம் நடக்கும்.

சிம்மம்
சுக்கிரன் 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குடியேறுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். 12ஆம் இட சுக்கிரனால் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். பசுவிற்கு வெள்ளிக்கிழமைகளில் கீரை கொடுக்கலாம்.

கன்னி
11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது அற்புதமான இடமாகும். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம் நல்லது நடக்கும்.

துலாம்
உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமை துர்கா தேவிக்கு பாயாசம் நிவேதனம் வைத்து வழிபடலாம் பல நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்
ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடக்கும்.

தனுசு
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. பணவருவாய் அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம். அம்மாவின் ஆசியுடன் நன்மைகள் பல நடக்கும்.

மகரம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். துர்க்கா தேவியை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.

கும்பம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும்.

மீனம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். பச்சரிசியை வெள்ளிக்கிழமை தானம் செய்ய நன்மைகள் நடக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications