மீனம் ராசியில் உச்சமடையும் காதல் நாயகன் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் கிரகம் சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடையப்போகிறார். கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு மார்ச் 2 ஆம் தேதியன்று சுக்கிர பெயர்ச்சி நிகழ உள்ளது.

சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசியில் குடியேறுகிறார். இது அவரது உச்சவீடாகும்.

உச்சம் பெற்ற சுக்கிரன் ஐந்து மடங்கு பலத்துடன் இருப்பார் பலன்களை வாரி வழங்குவார். தனது 7வது பார்வையால் கன்னி ராசியை பார்க்கிறார்.

சுக போக நாயகன்

சுக போக நாயகன்

சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சுக்கிரபகவான் குடும்ப வாழ்க்கை மட்டுமல்லாது எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமரப்போகிறார் சுக்கிரபகவான். உங்கள் ராசியின் 2வது 7வது அதிபதியானவர் சுக்கிரன் 12வது வீட்டிற்கு செல்வதால் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு அதிகரித்தாலும் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். எந்த பிரச்சினை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமரப் போகிறார். பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் பண வரவை அதிகரிக்கச் செய்யும். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்திருப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை தேவியை வணங்குங்கள். வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் அமரப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை பார்க்கும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. பெண்களிடத்தில் இடைவெளி விட்டு பழகுவது பாதுகாப்பானது. பணியிடங்களில் அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே ஏற்படும் சின்னச்சின்ன சச்சரவுகளை எளிதாக ஹேண்டில் செய்யுங்கள். லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குங்கள். பசுவிற்கு உணவு கொடுங்கள்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கு 9ஆம் இடமான மீனத்தில் அமர்க்கிறார் சுக்கிரன். குடும்பத்திலும் தொழிலில் நண்பர்களுடனும் உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் வர இருப்பதன் மூலம் நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. வருமானம் அதிகரிக்கும் காலம் இது. தந்தையுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரும். சிவபெருமானை பச்சரிசியால் வணங்கலாம்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்கிறார் சுக்கிரன். சிம்மம் ராசிக்காரர்களுக்கு உடல் நலம் சற்றே பாதிப்படையும். உடல் நலத்தில் கவனம் அவசியம். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். அதிகம் கவலைப்படாதீர்கள் பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் பத்திரமாக பாதுகாப்பது அவசியம். சூரிய நமஸ்காரம் தவறாது செய்யவும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை ஆடை அணியலாம்.

கன்னி

கன்னி

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். உச்சமடைந்த சுக்கிரன் தனது 7வது பார்வையால் கன்னி ராசிக்காரர்களை பார்வையிடுகிறார். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும் எதையும் எழுத்துப்பூர்வமாகவே ஹேண்டில் செய்யுங்கள். சிறிய அளவில் உடல்நலக்குறைவு பாதிக்கப்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். விநாயகரை அருகம் புற்களால் அர்ச்சனை செய்யவும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போகிறார். எதிரிகள் தொல்லை நீங்கும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும். சுக்கிரனை தரிசனம் செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். இதன் மூலம் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் வாழ்க்கைத் துணையை அழைத்துக்கொண்டு உல்லாச பயணம் செல்லலாம். சிலருக்கு காதல் மலரும் காலமிது. காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக காதலை சொல்லலாம். மகாவிஷ்ணுவை தினசரியும் வணங்க நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் பார்த்து கவனித்து வாங்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் சற்றே கவனம் வைக்க வேண்டிய நேரமிது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம். நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்க நன்மை நடக்கும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கு 3வது வீடான மீனம் ராசியில் குடியேரப்போகிறார் சுக்கிரன். முயற்சி ஸ்தானத்தில் குடியேறும் சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் நடக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலீசா படியுங்கள்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். மனைவி உடனான உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. திருமணம், விருந்து விஷேசங்களுக்கு சென்று வருவீர்கள். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்கு தேவையாக பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.

மீனம்

மீனம்

உங்கள் ராசியில் அமரப்போகிறார் சுக்கிரன். உச்சம் பெற்று அமையும் சுக்கிரனால் தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது அக்கவுண்ட்டை செக் செய்து கொள்ளுங்கள். எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. தினசரியும் விஷ்ணு சகஸ்ராநாமம் பாராயணம் செய்வது பாதிப்பை குறைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+