சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் - கோடை விடுமுறையில் சுற்றுலா செல்ல யாருக்கு யோகம் இருக்கு?
காதல் நாயகன் சுக்கிரன் தனது ராசியான ரிஷபத்தில் இருந்து மிதுனம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
Recommended Video

சென்னை: நவ கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களில் இடம் பெயர்வது வழக்கம். சுக்கிரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இந்த மாதம் 15ஆம் தேதி வைகாசி 1ஆம் தேதியன்று தனது ஆட்சி வீடான ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம்பெயர்ச்சி அடைகிறார்.
சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி.இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் இருப்பதை பொருத்தே தாம்பத்ய சுகம், ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அமையும். இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்காரர்களே இது நாள் வரை உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் இருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிரிகள் அமைதியடைவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகனத்தில் பயணிக்கும் போது கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள்.

ரிஷபம்
ஆட்சி பெற்று அமர்ந்திருந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் சஞ்சாிக்கப் போகிறார். பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடங்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். பணியில் மனைவி உடனான உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. சிலருக்கு ஊதிய உயா்விருக்கும். கலைத்துறையில் இருப்பவா்களுக்கு பிரகாசமான வாய்ப்பினை பெறலாம்.

மிதுனம்
உங்கள் ராசியில் அமரப்போகிறார் சுக்கிரன். தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். சாப்பிடும் உணவில் கவனம் தேவை.சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது அக்கவுண்ட்டை செக் செய்து கொள்ளுங்கள். எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. சிலா் வீடு கட்ட திட்டமிடுவாா்கள். சிலா் வாகனம் வாங்குவாா்கள். வெளியிட பயணம் செல்வாா்கள். சிலருக்கு ஆடம்பரமான பொருட்கள் வழியில் அதிக செலவேற்படும். வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும்.

கடகம்
12ஆம் இட சுக்கிரனால் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்க வாய்ப்பேற்படும். சிலா் வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி பெறுவாா்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். எந்த பிரச்சினை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். சிலருடைய பிள்ளைகளுக்கு பணி வாய்ப்பானது கிடைக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செலவிருக்கிறது. மேலும் நன்மைகள் நடக்க சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம்.

சிம்மம்
11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது அற்புதமான இடமாகும். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும்.
வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். ஏற்றமிகு வாழ்க்கையினை பெறுவதற்கான காலமாக இது அமைகிறது. உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்திருப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை விரதமிருந்து துர்கா தேவியை வணங்கவும்.

கன்னி
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே ஏற்படும் ஊடலை சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை மலர்களால் லட்சுமி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால் நல்லதே நடக்கும்.

துலாம்
ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் வர இருப்பதன் மூலம் நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வெள்ளிக்கிழமை தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யலாம்.

விருச்சிகம்
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் உடல் நலம் சற்றே பாதிப்படையும். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை ஆடை அணியலாம். நவகிரகங்களில் சுக்கிரபகவானுக்குவிளக்கேற்றி வழிபட பாதிப்புகள் குறையும்.

தனுசு
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு பாதிக்கப்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்க பங்கம் வந்து விடும். வெள்ளிக்கிழமையன்று தாயாரை வெண் தாமரை மலர்களினால் அர்ச்சனை செய்யவும்.

மகரம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வெள்ளிக்கிழமையன்று சிவபெருமானை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

கும்பம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டிய நேரம் இருந்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடலாம்.

மீனம்
மீனம் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து சோதித்து பார்த்து வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் இருக்கிறது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம்.












Click it and Unblock the Notifications