Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுசு ராசியில் சூரியன், சனியோடு காதல் கிரகம் சுக்ரன்... சுக்ர பெயர்ச்சி 12 ராசிக்கும் பலன் எப்படி?

கலைகளின் நாயகன்... காதல் கிரகம் சுக்ரன் இன்று முதல் குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன், சனியோடு இனைந்து கூட்டுக் குடித்தனம் நடத்தப் போகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதல், கல்யாணம் எப்படி உங்கள் ராசிக்கு?- வீடியோ

    சென்னை: சுக்ரன் காதல் கிரகம் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் இடம் பெயர்கிறார். சுக்ரன் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இப்போது குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன், சனியோடு இணைந்து சில தினங்கள் கூட்டு குடித்தனம் செய்யப்போகிறார். சுக்கிரன்.

    சுக்ரன் கலை, கலைஞர்களின் நாயகன். ஆடை, அலங்காரத்தின் அதிபதி. ரிஷபம் ராசியும், துலாம் ராசியும் சுக்ரனின் ஆட்சி வீடு... சுக்ரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். கன்னி ராசியில் நீசமடைகிறார்.

    சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. அதனால்தான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து அவனுக்கு சுக்கிர திசை நடக்கிறதா என்று கேட்பார்கள்.

    சுக்கிர திசை காலம் ஒருவருக்கு 20 வருடங்கள் நடைபெறும். மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போது சுக்கிர திசையில் பிறந்திருப்பார்கள். அவர்களுக்கு 20 வருடங்கள் நடக்க வாய்ப்பு இருக்காது. அதே நேரம், சனி திசை, கேது திசை காலங்களில் பிறந்தவர்கள், 20 ஆண்டுகள் சுக்கிரதிசையின் யோகங்களை அனுபவிப்பார்கள்.

    சுக்கிர யோகம் யாருக்கு?

    சுக்கிர யோகம் யாருக்கு?

    சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

    சுக்கிரப்பெயர்ச்சி

    சுக்கிரப்பெயர்ச்சி

    சுக்கிரபகவான் இன்று முதல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. குடும்ப வாழ்க்கை மட்டுமல்லாது எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.

    குரு வீட்டில் கூட்டு குடித்தனம்

    குரு வீட்டில் கூட்டு குடித்தனம்

    குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன் முதல் குடியேறினார், அவருடன் சனி இணைந்தார் இப்போது சுக்கிரன் கூட்டு குடித்தனம் நடத்தப்போகிறார். சுக்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், இந்த சேர்க்கை அவ்வளவாக நல்லதில்லை. இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவதன் மூலம் நல்ல பெறலாம்.

    உற்சாகம்

    உற்சாகம்

    மேஷ ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்க்கிறார் சுக்கிரன். குடும்பத்திலும் தொழிலில் பாட்னர்களுடனும் உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதன் மூலம் நீண்ட பயணத்திற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது.

    உடல் நலத்தில் கவனம்

    உடல் நலத்தில் கவனம்

    உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார் சுக்கிரன். உங்கள் ராசிக்கு அதிபதியும், 6ஆம் அதிபதியுமான சுக்கிரன் அட்டம ஸ்தானத்தில் மறைவது சிறப்பானதல்ல. உடல் நலம் சற்றே பாதிப்படையும். உடல் நலத்தில் கவனம் அவசியம். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். சுக்கிரபகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளை ஆடை அணியலாம்.

    ரொமான்ஸ் அதிகரிக்கும்

    ரொமான்ஸ் அதிகரிக்கும்

    காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். இது உங்கள் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகளை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். மிதுன ராசிக்காரர்கள் சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சிலருக்கோ சனிபகவானும் 7 ல் சூரியனோடு அமர்ந்திருப்பதால் சிலருக்கு காதல் முறிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம்.

    முயற்சி திருவினையாக்கும்

    முயற்சி திருவினையாக்கும்

    சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைகிறார். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. இது சில வாரங்களுக்கு மட்டுமே. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். சிவபெருமானை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

    உல்லாசம்தான்

    உல்லாசம்தான்

    சிம்ம ராசிக்கு 5ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார் சுக்கிரன். இதன் மூலம் காதல் உணர்வுகள் அரும்பும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். டோண்ட் ஒர்ரி... பீ ஹேப்பி என்று பலர் கூறிக்கொண்டு கெத்தாக இருக்கலாம். பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுங்கள்.

    சொத்துக்கள் சேரும்

    சொத்துக்கள் சேரும்

    கன்னி ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து வாங்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம்.

    நட்பு வட்டம் அதிகரிக்கும்

    நட்பு வட்டம் அதிகரிக்கும்

    துலாம் ராசிக்கு 3வது வீடான தனுசு ராசியில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் குடியேறியிருக்கிறார். அதுவும் சனி, சூரியனுடன் கூட்டுக்குடித்தனம் செய்கிறார். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்.

    அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

    அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

    உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் களத்திரகாரகனும், 12வது அதிபதியுமான சுக்கிரன் அமர்ந்துள்ளார். மனைவி உடன் உறவில் உற்சாகம் பிறக்கும். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கூடி வரும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.

    உணவில் கவனம்

    உணவில் கவனம்

    உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார் சுக்கிரன். இது இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டம். ஏனெனில் சூரியன், சனியோடு இன்று முதல் கூட்டுக்குடித்தனம் நடத்தப்போகிறார் சுக்கிரன். உணவில் கவனம் தேவை.சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். எதிரிகளுடன் சற்றே கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும்.

    வெளிநாடு வாய்ப்பு

    வெளிநாடு வாய்ப்பு

    உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் சுக்கிரபகவான் அமர்ந்துள்ளார். இது சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். சிலர் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள், ஏனெனில் ஏற்கனவே சனிபகவான் உங்களின் விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே உங்கள் செலவுகளை சுப செலவுகளை மாற்றுங்கள். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித்தரலாம்.

    வருவாய் அதிகரிக்கும்

    வருவாய் அதிகரிக்கும்

    கும்பம் ராசிக்கு 11வது இடத்தில் அமர்ந்துள்ளார் சுக்கிரபகவான். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்திருப்பீர்கள். உங்கள் காதலி அல்லது மனைவியுடன் சந்தோசமாக மகிழ்ந்திருப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை தேவியை வணங்குங்கள்.

    தொழிலில் வளர்ச்சி

    தொழிலில் வளர்ச்சி

    சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். சின்னச்சின்ன சச்சரவுகளை எளிதாக ஹேண்டில் செய்யுங்கள். லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குங்கள். ஏழை குழந்தைகளுக்கு பாயாசம் தானம் செய்யுங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+