விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20: மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுநாள் வரை குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பணம் செல்வாக்கு சேரும்

பணம் செல்வாக்கு சேரும்

தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும்.

அரசு வேலை கிடைக்கும்

அரசு வேலை கிடைக்கும்

ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசாங்கத்தின் பட்டம் கௌரவம் பெறுவீர்கள்.

செவ்வாயால் நன்மை

செவ்வாயால் நன்மை

புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் தன ஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். பேச்சில் சூடு அதிகமாகவே இருக்கும் கவனம் தேவை. மார்கழி முதல் மாசி வரை எட்டில் அமரும் செவ்வாயினால் உறவினர்களுடன் மோதல் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும்.

குருவினால் மகிழ்ச்சி கூடும்

குருவினால் மகிழ்ச்சி கூடும்

எட்டில் அமர்ந்த குரு புத்தாண்டு பிறக்கும் போது அதிசாரமாக ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். மீண்டும் விருச்சிகத்திற்கு அஷ்டம ஸ்தானத்திற்கு திரும்பும் குருவினால் ஏமாற்றங்கள்,மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். ஐப்பசி முதல் மீண்டும் ஒன்பதாம் செல்லும் குருவினால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.

 வெற்றி மீது வெற்றி

வெற்றி மீது வெற்றி

ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுநாள் வரை குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும், கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உற்சாகமாக வலம் வருவீர்கள். பணம் பாக்கெட்டில் நிறைய இருப்பதால் கடன்களை அடைப்பீர்கள். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு.

வெற்றி மீது வெற்றி வரும்

வெற்றி மீது வெற்றி வரும்


முயற்சி ஸ்தானத்தில் உள்ள ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் உள்ள கேதுவும் மன வலிமையை அதிகரிப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக பெரியோர்களை சந்திப்பீர்கள். ஆன்மீக தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வீர்கள். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பணவரவு அதிகரிப்பதோடு செல்வம், செல்வாக்கு உயர வகை செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+