விகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: கன்னி ராசிக்காரர்களுக்கு பணவருமானமும் வசதிகளும் அதிகரிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு வருமானம் தரும் ஆண்டாக அமைகிறது. கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே! இந்த புத்தாண்டு பிறக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களின் ரசனை அதிகரிக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. பணவரவு தாராளமாகவே இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வீட்டில் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விருந்தினர்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். விஐபிக்களின் நட்பு கிடைக்கும்.

அலைச்சல் கூடும்

அலைச்சல் கூடும்

புத்தாண்டு பிறக்கும் போது நான்காம் வீட்டில் குருபகவான் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். அம்மாவிற்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களுடன் பிரச்சினை ஏற்படும். வீடு, வண்டி வாகனம் வாங்கும் போது கவனமாக இருக்கவும். சொத்துக்களை வாங்கும் போது தாய்பத்திரத்தை நன்றாக படித்துப்பார்த்து வாங்கவும். ஞாபக மறதி அதிகரிக்கும். பணம் நகைகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் கவனமாக இருக்கவும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை

உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். நான்காம் வீட்டில் சனியோடு கேது இணைந்து ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். வீடு கட்டுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீடுகளை பார்வையிடுவதால் புதிய தொழில்கள் அமையும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.

பணம் நகைகளை பத்திரப்படுத்துங்கள்

பணம் நகைகளை பத்திரப்படுத்துங்கள்

ஆறாம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. வீட்டில் பணம் நகைகளை பத்திரப்படுத்துங்கள். விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தரவேண்டாம். ராகுவின் சஞ்சாரம் பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் ஆண்டு முழுவதும் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் வரும் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பண விரையம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

குரு பகவானை சரணடையுங்கள்

குரு பகவானை சரணடையுங்கள்

மாணவர்களின் கவனம் படிப்பில் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். பணம் புகழ் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விகாரி தமிழ் புத்தாண்டில் குரு பகவானை குளிர்ச்சிப்படுத்த வியாழக்கிழமைகளில் சுண்டல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+