விகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20 : மீனம் ராசிக்காரர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரும்

விகாரி தமிழ் புத்தாண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்கள் கை கூடி வரும். பண வருமானம் கை கூடி வரும்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: விகாரி தமிழ் புத்தாண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்களையும் அதிக பணவரவையும் தரப்போகிறது. நலமான ஆண்டு பிறந்துள்ளது. ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறந்துள்ளதால் அதிக பணம் கிடைக்கும். கடன்கள் தீரும்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த விகாரி வருடத்தின் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பதவிகள் பட்டங்கள்

பதவிகள் பட்டங்கள்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதி அற்புதமான மாதமாகும். இந்த வருடம் உங்க ராசிக்கு 5ஆம் வீட்டில் பிறப்பதால் மிகப்பெரிய யோகமாகும். சண்டைகள் முடிந்து சமாதானம் வந்து சேரும். கவுரமான பதவிகளும் தேடி வரும். மீனம் ராசிக்காரர்களுக்கு ராசியில் புதன் இரண்டாம் வீடான மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றிருக்கிறார் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய் நான்காம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. புது வருடம் பிறக்கும் போது விரைய ஸ்தானத்தில் இருந்த சுக்கிரன் இப்போது உச்சம் பெற்று ராசியில் அமர்ந்திருக்கிறார் அமைந்திருக்கிறார்.

 நன்மைகள் நிறைந்த ஆண்டு

நன்மைகள் நிறைந்த ஆண்டு

புதனின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு உங்களில் பலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். புதன் நீச பங்கம் பெற்றிருப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வரும் வாய்ப்பு அமையும் என்பதால் நன்மைகள் நிறைந்த புதிய ஆண்டாக அமையப்போகிறது.

 பணத்தை பத்திரப்படுத்துங்கள்

பணத்தை பத்திரப்படுத்துங்கள்

இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்துள்ள சூரியனால் உடம்பில் சூடு அதிகரிக்கும். கண் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கி பொருளாதார வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் தோன்றும். பணத்தை பத்திரப்படுத்துவதில் கவனம் தேவை. பணத்தை பதுக்கினால் அரசுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். செவ்வாய் பகவான் சஞ்சாரத்தினால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

நான்காம் வீட்டில் ராகு உள்ளதால் வீடு, வண்டி வாகன பராமரிப்பு வேலைகள் அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்யலாம். குல தெய்வ வழிபாடு செய்தால் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரிகளை செலுத்துவது நல்லது.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குரு பகவானின் சஞ்சாரத்தினால் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடியேறுவீர்கள். இரண்டாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைப்பதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். புதிய வியாபாரம் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவீர்கள். இழந்த செல்வாக்கு திரும்ப கிடைக்கும்.

உயர்பதவி யோகம் தேடி வரும்

உயர்பதவி யோகம் தேடி வரும்

பத்தாம் வீட்டில் சனி, கேது இணைத்திருப்பதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பிரச்சினை ஏற்படும் போது சிவபெருமானை வணங்க நன்மைகள் நடக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். சிலருக்கு குழந்தைகள் பிறக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். மொத்தத்தில் இந்த விகாரி தமிழ் வருடம் நன்மைகளும், வெற்றிகளும் தேடி வரும் ஆண்டாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+