விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. அரசு வேலைகள் கிடைக்கும். வெற்றியுடன் நாடாளும் யோகமும் கைகூடி வரும்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அழகு ஆரோக்கியம் கூடும்

அழகு ஆரோக்கியம் கூடும்

உங்க ராசிக்கு ஒன்பதாவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. முகத்தில் பொலிவு கூடும். அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.

உங்க ராசி அதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து நேர் பார்வையாக பார்க்கிறார் இது நல்ல அம்சம். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். எட்டாம் பார்வையாக உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் கோபத்தை தவிர்க்கவும். திருமண தடைகள் நீங்கும்.

சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

சூரியன் ஆறாம் வீட்டில் உச்சமடைவது சிறப்பம்சம். சுறுசுறுப்பு அதிகரிக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் கவனம் தேவை. உடல் நலனில் அதிக அக்கறை தேவை. கந்த சஷ்டி கவசம் படிக்க உடல் நல பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் கடன்கள் கிடைக்கும்.

அரசு வேலை கிடைக்கும்

அரசு வேலை கிடைக்கும்

குரு பகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஆறு, எட்டு பத்தாம் வீடுகளை பார்வையிடுகிறார். அரசு வேலை கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாடாளும் யோகம் மீண்டும் வரும். இந்திய ஆட்சிப்பணி பலருக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கூடி வரும். பள்ளி கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடுகளில் சென்று கல்வி பயிலும் யோகம் சிலருக்குக் கூடி வரும்.

சனி குரு கூட்டணி

சனி குரு கூட்டணி

வாக்கு ஸ்தானத்தில் சனி கேது உடன் இருக்கிறார். பாத சனி, வாக்கு சனி என்று பயம் வேண்டாம் குருவின் கூட்டணியினால் பிரச்சினைகள் தீரும் செவ்வாயின் பார்வை வாக்கு ஸ்தானத்தில் விழுவதால் கோபமாக பேச வேண்டாம். விடா முயற்சி வெற்றிகளை தேடித்தரும் சகோதரர்களிடையேயான பிரச்சினைகள் தீரும். சனி, குரு கேது சேர்க்கை, தொழிலில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட திருமணங்கள் இந்த ஆண்டு நடந்து முடியும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக விகாரி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+