மோடி மீண்டும் பிரதமர் - தமிழக அரசியலில் ரஜினிக்கு வெற்றி : ஸ்ரீகாளஹஸ்தி ஜோதிடர்
தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்கும் என்று விளம்பி உகாதி வருட பஞ்சாங்கம் வாசித்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் குருக்கள் கூறியுள்ளார்.
ஸ்ரீகாளஹஸ்தி: 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என்றும் தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்கும் என்றும் விளம்பி உகாதி விளம்பி பஞ்சாங்கம் வாசித்த ஸ்ரீ காளஹஸ்தி குருக்கள் கூறினார்.
கன்னடம், தெலுங்கு வருடப் பிறப்பான விளம்பி நாம வருடம் கடந்த 18ஆம் தேதி பிறந்தது. அன்றைய தினம் அனைத்து முக்கிய கோயில்களிலும் புதிய பஞ்சாங்கம் வேத பண்டிதர்களால் படிக்கப்பட்டது.

இதில் வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஸ்தான குருக்கள் விளம்பி பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன் படித்து அதன் பலன்களை கூறினார்.
அப்போது அவர், 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என்று கூறினார்.
எனினும் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறையும்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு நாடாளுமன்ற தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.
தெலங்கானாவில் மீண்டும் கே.சந்திரசேகர ராவே முதல்வராக பதவியேற்பார்.
தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்துக்கு வெற்றி கிடைக்கும் என்று விளம்பி நாம ஆண்டின் பஞ்சாங்க வாக்கினை ராமலிங்கேஸ்வர குருக்கள் வாசித்தார்.
அரசியல் பற்றி உகாதி பஞ்சாங்கம் வாசிப்பின் போது கூறிய குருக்கள், துபாயில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சியான தகவல் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications