வாழ்க்கையே மாற போகுது.. லக்கியான நாட்கள்! குரு வக்ர பெயர்ச்சி.. கன்னி ராசிக்கு நடக்கும் 8 விஷயங்கள்
சென்னை: குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக கன்னி ராசிக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
குருவின் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.

சிலருக்கு குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் போக்கையே கூட மாற்றம். குருவின் பெயர்ச்சியால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. அப்படியே வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் குரு இருக்கும் இடம்.. பார்க்கும் இடம்.. நகரும் இடத்தை பொறுத்தது. குரு ஒருவரை மேலே தூக்கி வைக்கும்.. சிலரை கீழே இறக்கியும் வைக்கும்.
பலன்கள்:
1. சில கன்னி ராசிக்காரர்களுக்கு கடுமையான கடன் நிலவி வந்தது. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருந்தது. குடும்பத்தில் அண்ணன், தம்பிகளை நம்பி வாழ வேண்டிய மோசமான நிலை இருந்தது. பிறர் பணத்தில் வாழ வேண்டிய மோசமான சூழல் இருந்தது
2. மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும்.படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
3. வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.
4. புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும்.
5. உங்க ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது.
6. வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திடீர் மயக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.
7. எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும்.
8. எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
பரிகாரம்: பழனி முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.












Click it and Unblock the Notifications