வாழ்க்கையில் இப்படி நல்ல காலம் வருவதெல்லாம் அதிர்ஷ்டம்.. துலாம் ராசிக்கு குரு தரப்போகும் 7 ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: துலாம் ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக வாழ்க்கையில் 7 முக்கியமான விஷயங்கள் நடக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

குருவின் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.

What are the 7 things that will happen to Tulam Rasi on Guru Vakra Peyarchi Palan 2024

சிலருக்கு குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் போக்கையே கூட மாற்றும். குருவின் பெயர்ச்சியால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. அப்படியே வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் குரு இருக்கும் இடம்.. பார்க்கும் இடம்.. நகரும் இடத்தை பொறுத்தது. குரு ஒருவரை மேலே தூக்கி வைக்கும்.. சிலரை கீழே இறக்கியும் வைக்கும்.

துலாம் ராசிக்கு நடக்க போகும் 7 விஷயங்கள்: துலாம் ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக வாழ்க்கையில் 7 முக்கியமான விஷயங்கள் நடக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

1. உங்களுக்கு பல வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்தது. உங்களுக்கு வேலையில் கடுமையான கஷ்டங்கள் நிலவி வந்தது. உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது. வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. இதெல்லாம் சரியாகும்.

2. வேளைகளில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும்.

3, நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும். இந்த குரு பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம்.

4. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது. அதெல்லாம் முடிய போகிறது.

5. முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார். ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும்.

6. கவனமாகவும் யோசித்து பேசுங்கள் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

7.தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள்.

பரிகாரம்: புன்னைநல்லூர் மாரியம்மான் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+