2024ம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள்.. ரிஷப ராசிக்கு என்ன ஆகும்? குபேர யோகம் அடிக்கும் அசத்தல் காலம்
சென்னை: அக்டோபர்.. நவம்பர்.. டிசம்பர் என்று 2024 வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. இந்த 3 மாதங்கள் ரிஷப ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
அக்டோபர் மாதம்: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். இதனால் ரிஷப ராசிக்கு சிறந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும். தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமாக பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

ஆரோக்கிய ரீதியாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கும். நிதி எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். கடன்கள் குறையும். அதிகம் பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வீர்கள்.
அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாக யோசித்து பேசுங்கள் . உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
நவம்பர் மாதம்: நவம்பர் மாதம் ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும். ஆளை பார்த்தாலே இவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு மோசமான சூழ்நிலை உங்களுக்கு இருந்து வந்தது. இந்த தோல்விகளை மறைக்க வெளியே கோபமாக செயல்படுவது.. உங்களிடம் யாரும் துணிந்து பேச முடியாத அளவிற்கு முரட்டு தனமாக இருப்பது என்று இத்தனை காலம் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள். நவம்பர் மாதம் இதெல்லாம் சரியாகும். முக்கியமாக மன ரீதியாக நிலவிய பிரச்சனைகள் சரியாகும்.
டிசம்பர் மாதம்: டிசம்பர் மாதத்தில் போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். அவருக்கு புதுப்பணம் வந்து இருக்கிறது என்று கமெண்ட் அடிப்பார்களே.. அப்படி புதுப்பணம் வந்தவர் போல உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது.
உங்களுக்கு வீடு, ஆரோக்கியம், குடும்ப நலம், திருமணம், பணம், என்று எல்லாம் கொட்ட போகிறது. குபேர யோகம் அடித்துவிட்டது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு குபேர யோகம் உங்கள் ராசிக்கு டிசம்பரில் இருக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications