Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவலியா.. பிபியா.. ஆமாப்பா ஆமா.. 12 ராசிக்காரர்களை பாதிக்கும் நோய்கள்!

ஒரே தலைவலியா இருக்கேப்பா என்றும்... பிபி எகிறுதுப்பா என்றும் கூறி சங்கடப்படுவார்கள். கிரகங்களின் சேர்க்கை, கோள்களின் காரகத்துவம், சேர்க்கை, பார்வையைப் பொறுத்து நோய்கள் தாக்குகின்றன என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராசிகள் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்து இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் பாதிக்கின்றன.

கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள், மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள்.

மேற்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்

தன்னம்பிக்கை நாயகர்கள்

தன்னம்பிக்கை நாயகர்கள்

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். காற்று ராசிக்காரர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் லக்னத்தில் பிறந்த ஜாதகர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெரும் அமைப்பை பெறுவார் , அருங்கலைகளில் ஈடுபாடு , கற்பனை திறனால் சாதனை செய்யும் அமைப்பு

தலைவலி பாதிப்பு

தலைவலி பாதிப்பு

நெருப்பு ராசிகளின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை கொண்டவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு. மேஷம் ராசிக்காரர்கள் தலைவலி மற்றும் மூக்கடைப்பால் கஷ்டப்படுவார்கள். இவர்கள் வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், அவஸ்தைப்பட்டு வரும் பிரச்சனை மாயமாக மறையும்.

சிம்மம் - தனுசு

சிம்மம் - தனுசு

சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. தனுசு ராசிக்காரர்களின் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். குறிப்பாக இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் சேரும். இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.

ரிஷபத்திற்கு வயிறு பிரச்சினை

ரிஷபத்திற்கு வயிறு பிரச்சினை

நில ராசிக்காரர்களுக்கு சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உப்புச்சத்தால் தான் ரிஷப ராசிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள். இந்த வயிறு பிரச்சனை சரிசெய்ய, பசலைக்கீரை, காய்கறி சாலட், கிரான்பெர்ரி மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கன்னி - மகரம்

கன்னி - மகரம்

கன்னி ராசிக்காரகள் செரிமான பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதில் நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி உட்கொள்வது நல்லது. மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். பட்டாணி, உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, ஓட்ஸ், பால் ஆகியவைகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.

மூளையே பிரதானம்

மூளையே பிரதானம்

காற்று ராசிக்காரர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.
இந்த ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

தண்ணீர் குடிங்க பாஸ்

தண்ணீர் குடிங்க பாஸ்

மிதுனம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சிறந்த உணவுகளான பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை உட்கொள்வதோடு, தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கும். தோல் நோய்கள் தாக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பேரிக்காய், அத்திப்பழம், எலுமிச்சை, பேரிச்சம்பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

மீன் உணவுகள் அவசியம்

மீன் உணவுகள் அவசியம்

கடக ராசிக்காரர்கள் குறிப்பாக கலோரிகள் அதிகம் நிறைந்த தவறான உணவுகளைத் தான் உட்கொள்வார்கள். ஆனால் சரியான உணவுகளான பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை டென்சனாக இருக்கும் தருணங்களில் உட்கொண்டால், வயிறும் நிறையும், உடல் ஆரோக்கியமும் மேம்படும், டென்சனும் குறையும். விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் நோய்த்தொற்றுகளால் கஷ்டப்படுவார்கள். பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி சாப்பிடலாம். மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் கஷ்டப்படுவார்கள். சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+