Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் காதல் குணங்கள் எப்படி?

எந்த மொழி பேசினாலும் காதலை சொல்ல பயன்படுத்துவது ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தைதான். 12 ராசிக்காரர்கள் காதலை எப்படி எங்கே சொல்வார்கள் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதல், கல்யாணம் எப்படி உங்கள் ராசிக்கு?- வீடியோ

    சென்னை: காதலை சொல்லும் போதும் சரி காதலிக்கும் போது சரி எந்த ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் ஐ லவ் யூ என்ற வார்த்தையை எப்படி வெளிப்படுத்துவர்கள் என பார்க்கலாம்.

    காதலைத் தீர்மானிப்பதில், சுக்கிரன், சந்திரன் , குரு இந்த மூன்று கிரகங்களின் நிலை ஒருவரது ஜாதகத்தில் எப்படி உள்ளது எனப் பார்க்கவேண்டும். எந்த ராசிக்காரராக இருந்தாலும் அவர்களது ஜாதகத்தில் களத்திரக்காரகனான சுக்கிரனும், களத்திரஸ்தானமான 7ம் இடமும் காதல் வயப்படுவதைத் தீர்மானிக்கும்.

    காதல் உணர்வுகொண்ட ராசிகள் என்று பார்க்கும்போது, சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட, சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசிகள்.

    சுக்கிரன் வீடு மட்டும் அல்லாது அவரவர்களின் ஜாதகத்தில் ஐந்தாம் இடமும், சந்திரன் மற்றும் சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதே காரணமாகும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால்தான் காதல் கைகூடும். இல்லாவிட்டால். காதல் தோல்வியில்தான் முடியும். இருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதும் மேலும், சுக்கிரன் இருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

    மேஷம்

    மேஷம்

    ஐ லவ் யூ என்ற வார்த்தையை அத்தனை எளிதாக யாரும் கூறிவிட முடியாது. அது வெறும் உதட்டில் இருந்து மற்றும் வரும் வார்த்தையல்ல உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தை. செவ்வாயை ஆட்சி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் கூறும் ஐ லவ் யூ காதலரை வசப்படுத்துவது நிச்சயம்.

    மேஷம்

    மேஷம்

    ஐ லவ் யூ என்ற வார்த்தையை அத்தனை எளிதாக யாரும் கூறிவிட முடியாது. அது வெறும் உதட்டில் இருந்து மற்றும் வரும் வார்த்தையல்ல உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தை. செவ்வாயை ஆட்சி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் கூறும் ஐ லவ் யூ காதலரை வசப்படுத்துவது நிச்சயம்.

    ரிஷபம்

    ரிஷபம்

    காதல் நாயகன் சுக்கிரனை ஆட்சி நாதனாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் காதலை கவித்துவமாக வெளிப்படுத்துவார்கள். காதலுக்காக சற்றே அதிகம் மெனக்கெடுவார்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தையை இதயத்தில் இருந்து வெளிப்படுத்துவார்கள்.

    மிதுனம்

    மிதுனம்

    புதன் கிரகத்தை ராசி நாதனாக கொண்ட மிதுனம் ராசிக்கார்கள் நேர்மையாக காதலை வெளிப்படுத்துவார்கள். தாங்கள் காதலிக்கும் நபர்களும் அதே நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள்.

    கடகம்

    கடகம்

    கடக ராசிக்காரர்கள் ரொம்ப சென்சிடிவ். மனோகாரகன் சந்திரனை ராசி நாதனாக கொண்ட இவர்கள் காதலுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால் அதற்கே முக்கியத்துவம் தருவார்கள். அதே நேரத்தில் பிரச்சினை என்றால் காதலை முறித்துக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள். சூரியனை ராசி நாதனாக கொண்ட இவர்கள் காதலுக்காகவும், காதலிக்கும் நபருக்காகவும் சாகசங்களை செய்து வெற்றி பெறுவார். ஐ லவ் யூ என்று காதலை வெளிப்படுத்துவதை மிகப்பெரிய சாதனை போல சொல்வார்.

    கன்னி

    கன்னி

    கன்னி ராசிக்காரர்களுக்கு காதல் உயிர் மூச்சு. நரம்பின் நாயகன் புதன் ஆட்சி, உச்சம் பெற்ற ராசியான கன்னி ராசிக்காரர்கள் ஐ லவ் யூ சொல்லி விட்டால் அதற்காக தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.

    துலாம்

    துலாம்

    துலாம் ராசிக்காரர்கள் அழகானவர்கள். சுக்கிரன் ஆட்சிநாதனாக கொண்ட இந்த ராசிக்கரர்களுக்கு காதலை உண்மையாக நேசித்து வெளிப்படுத்துவார்கள். ஐ லவ் யூ சொல்லிவிட்டால் காதலிப்பவர்களுக்கு எப்போது உண்மையாக இருப்பார்கள். அதே நேரத்தில் சிறு மனஸ்தாபம் வந்தாலும் காதலை முறித்துக்கொள்வார்கள்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். காதலில் கூட பாதுகாப்பு உணர்வுடனேயே இருப்பார்கள். ஐ லவ் யூ சொல்லிவிட்டால் அவர்களை நம்பி களமிறங்கலாம்.

    தனுசு

    தனுசு

    கண்ணீரோ காதலோ உண்மையாக வெளிப்படுத்துவார்கள் தனுசு ராசிக்கார்கள். குருவை ராசி நாதனாக கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு காதல் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ லவ் யூ சொல்வார்கள். அவர்களின் காதல் உண்மை காதலாக இருக்கும்.

    மகரம்

    மகரம்

    மகரம் ராசிக்காரர்கள் சரியான வேலைக்காரர்கள். சனியை ராசி நாதனாக கொண்ட இவர்கள் காதலிக்கும் முன்பு தான் செய்யும் வேலையை கடவுளாக பாவிப்பார்கள். காதலுக்காக அதிகம் மெனக்கெடுவார்கள். காதலிக்கும் நபரிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டார் அதில் உறுதியாக இருந்து காதலில் ஜெயிப்பார்கள்.

    கும்பம்

    கும்பம்

    கும்பம் ராசிக்காரர்களின் மனதில் ஆழமான காதல் இருக்கும். சனியை ஆதிக்க நாயகனாக கொண்ட இவர்களின் மனதில் காதலை வெளிப்படுத்த அச்சப்படுவார்கள். ஆழமான காதலோடு ஒருமுறை ஐ லவ் யூ என்று சொல்லி விட்டால் அதை உறுதியாக செயல்படுத்துவர்கள்.

    மீனம்

    மீனம்

    ரொமான்ஸ் நாயகர்களான மீனம் ராசிக்கார்கள் குருவை ராசி நாதனாக கொண்டவர்கள். இந்த ராசியில் காதல் நாயகன் சுக்கிரன் உச்சமடைகிறார். இவர்களின் காதல் எப்போதும் உயிர்புடனேயே இருக்கும். ஐ லவ் யூ சொல்லி விட்டால் அப்புறம் காதலுக்காக எதையும் செய்ய தயாராவார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+