சனிப் பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்போது ஆரம்பம் தெரியுமா? மகர ராசிக்கு நிம்மதி
சென்னை: 2025ம் ஆண்டு மார்ச் 29 அன்று நடைபெற உள்ளது சனி பெயர்ச்சி (Sani peyarchi). பொதுவாக சனிப் பெயர்ச்சி, 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அதன்படி, இந்த வருடம் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி போன்ற சனி பகவானின் பார்வைகள் எந்தெந்த ராசிகளை பாதிக்கும் என்பதை விரிவாக இந்த ஜோதிட கட்டுரையில் காணலாமா..
ஏழரை சனி என்பது ஒருவரது வாழ்வில் ஏழரை ஆண்டுகள் நீடிக்கும் ஒரு காலகட்டமாகும். ஏழரை சனி யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களுக்கு 3 கட்டங்களாக இது கணிக்கப்படும். அது என்ன மூன்று பகுதிகள் என்கிறீர்களா, இதோ அந்த தகவல்:

விரைய சனி: முதல் இரண்டரை ஆண்டுகள்
ஜென்ம சனி: அடுத்த இரண்டரை ஆண்டுகள்
பாத சனி: இறுதி இரண்டரை ஆண்டுகள்.
ஒருவரின் ராசிக்கு முந்தைய ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது அது விரைய சனி. இரண்டரை ஆண்டுகாலம் முடிந்து, ராசியிலேயே அவர் சஞ்சரிக்கும் காலம் ஜென்ம சனியாகும். ராசிக்கு அடுத்த இடத்திற்கு அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார் அல்லவா, அதுதான் பாத சனி என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் ஏழரை சனி என்பது 3 பகுதிகளாக கணக்கிடப்படுகிறது.
2025 மார்ச் 29ம் தேதி நடைபெறும் சனி பெயர்ச்சிக்கு பிறகு:
- மேஷம்: விரைய சனி தொடங்குகிறது.
- மீனம்: ஜென்ம சனி தொடங்குகிறது.
- கும்பம்: பாத சனி தொடங்குகிறது.
- மகரம்: ஏழரை சனியிலிருந்து விடுபடுகிறது.
- அதாவது, மேஷ ராசியினருக்கு முதல் முறையாக ஏழரை சனி தொடங்குகிறது. மீனம் ஏற்கனவே இரண்டரை ஆண்டு காலத்தை கடந்துவிட்டனர். கும்பம் ஏற்கனவே ஐந்தாண்டு காலத்தை கடந்துவிட்டனர். மகர ராசியினர் ஏழரை ஆண்டு காலத்தை கடந்துவிடுகிறார்கள். சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியடைவதால், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி, அஷ்டம சனி:
- அர்த்தாஷ்டம சனி: ராசிக்கு நான்காம் இடத்தில் சனி வரும்போது ஏற்படும்.
- கண்டக சனி: ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி வரும்போது ஏற்படும்.
- அஷ்டம சனி: ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி வரும்போது ஏற்படும்.
2025 ஆண்டின் சனி பெயர்ச்சிக்கு பிறகு:
- விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறது.
- சிம்மம்: கண்டக சனியிலிருந்து விடுபடுகிறது.
- கடகம்: அஷ்டம சனியிலிருந்து விடுபடுகிறது.
- கன்னி: கண்டக சனி தொடங்குகிறது.
- சிம்மம்: அஷ்டம சனி தொடங்குகிறது.
2025 சனி பெயர்ச்சியின் ஒட்டுமொத்த தாக்கம் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா, இதோ கால்குலேட்டர்:
| ராசி | சனி பார்வை | நல்ல பலன்கள் (%) | |
| 1 | மேஷம் | விரைய சனி | 70 |
| 2 | ரிஷபம் | லாப சனி | 95 |
| 3 | மிதுனம் | கர்ம சனி | 80 |
| 4 | கடகம் | பாக்கிய சனி | 90 |
| 5 | சிம்மம் | அஷ்டம சனி | 76 |
| 6 | கன்னி | கண்டக சனி | 70 |
| 7 | துலாம் | ரோக சனி | 95 |
| 8 | விருச்சிகம் | பஞ்சம சனி | 91 |
| 9 | தனுசு | அஷ்டம சனி | 80 |
| 10 | மகரம் | சகாய சனி | 92 |
| 11 | கும்பம் | பாத சனி | 65 |
| 12 | மீனம் | ஜென்ம சனி | 50 |
சனி பெயர்ச்சியை எவ்வாறு எதிர்கொள்வது:
- நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்
- தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள், சனி பகவான் கர்மாவின் கடவுள் என்பதால் நீங்கள் செய்த தவறுக்கு தக்கபடிதான் பலன்.
- தான தர்மம், கொடுக்கவும் பகிர்ந்து கொள்ளவும், இது நல்ல பலன்களைத் தரும்.
- ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளுங்கள், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். பாவ கர்மாவின் தாக்கத்தை குறைத்துவிடும்.
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைத் தரட்டும்!












Click it and Unblock the Notifications