மேஷமும் கன்னியும் கூட்டணிக்கு உதவாது... எச்சரிக்கை - யாருடன் யார் கூட்டு சேரலாம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களும் வியாபாரம், தொழில் செய்ய கூட்டணி சேர்வதற்கு சரியான ராசி பார்த்து சேர வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதிகள்தான் கட்சி பார்த்து கூட்டணி வைக்க வேண்டுமா? ஜோதிடத்திலும் ராசி பார்த்து ஒருவருடன் சேரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம். சிலரை பார்க்கும் போதே பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சிலரை பார்க்கும் போதே ஒதுங்கத் தோன்றும் இதற்குக் காரணம் அலைவரிசை செட் ஆகாததுதான். ஒருசிலருடன் நமக்கு ஒத்துப்போகும், ஒரு சிலருடன் இயல்பாக பேசி பழக முடியாது இப்படி நடப்பதற்குக் காரணம் ராசிகளின் குணாதியங்கள்தான்.

மேஷம் ராசி என்றால், நீங்கள் பிறப்பிலேயே மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள், அதனால்தான் தன்னம்பிக்கை இல்லாத, சிறிய பிரச்சனைகளுக்கு தன்னம்பிக்கை இழப்பவர்களை வெறுப்பீர்கள். ரிஷப ராசிக்காரர்கள் அவர்களுடைய அமைதிக்கு ஊறு கொடுப்பவர்களிடம் இருந்து மிகவும் விலகியே இருப்பார்கள். மிதுனம் ராசிக்காரர்கள் அமைதியான வாழ்க்கைக்கு ஊறு விளைவிப்பவர்களை வெறுப்பீர்கள்.

கடகம் ராசிக்காரர்களின் உள்ளத்தில் உள்ளதை யாரும் எளிதில் அறிந்துகொள்ள முடியாது. சிம்ம ராசியாக இருந்தால், எல்லோருடைய கவனத்தையும் எல்லா நேரமும் வெற்றிகரமாக கவரும் வகையில் இருக்க விரும்புவீர்கள். கன்னி ராசி என்றால், குறிப்பாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைதியான மற்றும் சீரான முறையில் வைக்க விரும்புவீர்கள். துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதிலும் சமநிலையை மற்றும் முழுமையை விரும்புவீர்கள். விருச்சிகம் ராசிக்காரர்கள் தனிமை விரும்பி, அடுத்தவர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள்,

தனுசு ராசிக்காரர்கள் மிகவும் துணிச்சலான தன்மை கொண்டவர்கள். மகரம் ராசிக்காரர்கள் கடுமையான சோதனைகளை சந்திப்பீர்கள்.

கும்பம் ராசிக்காரர்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிடும் நபர்களை வெறுப்பீர்கள். மீனம் ராசிக்காரர்கள் உங்களுக்கு ஊறு விளைவிப்பவர்கள் என்று எண்ணுபவர்களிடம் மிக எளிதாக எரிச்சலடைவீர்கள். ராசிகளின் குணாதிசயங்களைப் பொறுத்து எந்த ராசிக்காரர்களுடன் யார் கூட்டணி வைக்கலாம் என்று கூறியுள்ளார் ஜோதிடர் பழனியப்பன்.

மேஷம் - ரிஷபம்

மேஷம் - ரிஷபம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் நன்மை செய்வர், உதவுவர். அந்த ராசிக்காரர்களுடன் நட்பு, வியாபார கூட்டணி வைத்தால் தீமை உண்டாகாது. கன்னி,விருச்சிகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,கன்னி,மகரம்,மீனம் ராசியினர் நன்மை செய்வர். துலாம், தனுசு ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

மிதுனம் - கடகம்

மிதுனம் - கடகம்

மிதுனம், ராசியினருக்கு கன்னி,துலாம்,சிம்மம்,தனுசு,கும்பம்,மேஷம் ராசியினர் நன்மை செய்வர்.விருச்சிகம்,மகரம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கடகம் ராசியினருக்கு ரிஷபம்,துலாம்,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசியினரால் யோகம் உண்டாகும்..தனுசு,கும்பம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம் - கன்னி

சிம்மம் - கன்னி

சிம்ம ராசியினருக்கு மிதுனம்,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினரால் நன்மை உண்டகும். மகரம்,மீனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கன்னி ராசியில் பிறந்தவருக்கு தனுசு,மகரம்,மீனம்,ரிஷபம்,கடகம் ராசியினர் நன்மை செய்வர். கும்பம்,மேஷம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம் - விருச்சிகம்

துலாம் - விருச்சிகம்

துலாம் ராசியினருக்கு மகரம்,கும்பம்,மேஷம்,மிதுனம்,சிம்மம் ராசியினர் நன்மை செய்வர். மீனம்,ரிஷபம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விருச்சிகம் ராசியில் பிறந்தவருக்கு கும்பம்,மீனம்,ரிஷபம்,கடகம்,கன்னி ராசியினர் நன்மை செய்வர். மேஷம்,மிதுனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு - மகரம்

தனுசு - மகரம்

தனுசு , ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, ராசியினரால் நன்மை உண்டாகும். ரிஷபம்,கடகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மகரம், ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,கடகம்,ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள். மிதுனம்,சிம்மம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம் - மீனம்

கும்பம் - மீனம்

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் நன்மை செய்வர். கடகம்,கன்னி ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம் ராசியினர் நன்மை செய்வர். சிம்மம்,துலாம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த பலன்கள் வியாபார கூட்டுக்கும்,நட்புக்கும் மட்டுமே பொருந்தும் உறவு முறைக்கு பொருந்தி பார்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+