Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரன்..மாளவியா யோகத்தால் மனம் குளிரப்போகும் ராசிக்காரர்கள் யார்

சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமரும் போது சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கும் அது எந்த ராசிக்காரர்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாளவியா யோகம் மகத்தானது. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீன ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும். மேஷ ராசியில் அமர்ந்துள்ள சுக்கிரன் வரும் ஜூன்18ல் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமரும் போது சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கும் அது எந்த ராசிக்காரர்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.

இந்த மாளவியா யோகம் அமைந்த ஜாதகர்களுக்கு மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், கணவன் மனைவி எப்போதுமே காதல் வாழ்க்கை வாழ்வாங்க, அவங்களுடைய நெருக்கம் அலாதியானது. எப்பவுமே சந்தோஷமாக இருப்பாங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். வீடே லட்சுமி கடாட்சமாக இருக்கும். கோச்சார ரீதியாக சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்று அமரும் போதும் இந்த சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும்.

மாளவியா யோகம் இருக்கிற ராசிக்காரர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். எப்பவுமே பணவரவு இருந்து கொண்டே இருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். வாகன யோகம் கிடைக்கும். மாடி வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்வார்கள். அவர்களின் சந்தோஷத்துக்கு குறைச்சலே இருக்காது. உங்களுடைய சுய ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு பயணிக்கிறார் என்று பாருங்கள். உங்களுக்கு மாளவியா யோகம் இருந்து இப்போது கோச்சார ரீதியாகவும் சுக்கிரன் நல்ல நிலைக்கு வரும் போது அதிர்ஷ்டமும் வருமானமும் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்கு ராசி நாதன் சுக்கிரன். ஜூன் மாதத்தில் செல்வ வளத்தை அள்ளிக்கொடுக்கப் போகிறார் சுக்கிரன். காதல் நாயகன் சுக்கிரன் இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். இதனால உங்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். இதுநாள் வரை அனுபவிக்காத மகிழ்ச்சியை அனுபவிக்கத் தயாராவீர்கள். முகத்தில பொலிவும் அழகும் கூடும். மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகமாகும். தங்க நகைகள் வாங்குவீர்கள். வைகாசியில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு எல்லாமே நன்றாக கூடி வரப்போகிறது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வந்து ஆட்சி பெற்று ஜம்முன்னு அமரப்போகிறார். இது மாளவியா யோக அமைப்பு. இதுநாள் வரைக்கும் ஏன் இந்த வேலைக்கு போறோம் என்று வெறுப்பாக இருந்த உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் ஜூன் மாதத்தில் உங்கள் வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பத்தில் சுக்கிரன் வந்தால் சுகமான பதவியை கொடுப்பார். நல்ல வேலை கிடைக்கப் போகிறது. சிலருக்கு பதவி உயர்வை கொடுப்பார் சுக்கிரன். குடும்பத்தில் கணவன் மனைவி நெருக்கம் அதிகமாகும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப் போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். ஆட்சி பெற்ற சுக்கிரனின் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. உங்கள் வாழ்க்கை துணையோட அன்பையும் காதலையும் திகட்ட திகட்ட அனுபவிப்பீர்கள். சிலருக்கு புதிய காதல் அரும்பும். காதலில் சிக்கிய சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். கல்யாணம் முடிந்தும் ஹனிமூனை தள்ளிப்போட்டு வந்தவர்கள் இனி ஜாலியாக டூர் கிளம்புங்கள்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..உங்களுடைய சுக ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு மாளவியா யோகம் தேடி வரப்போகிறது. உங்களுடைய வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். பெண்கள் நகை, ஆடை ஆபரணம் என வாங்குவீர்கள். மாளவியா யோக காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+