தாம்பத்யத்திற்கு இந்த பொருத்தம் கட்டாயம் தேவை.. இல்லாட்டி கண்டிப்பா கல்யாணம் பண்ணாதீங்க!
பத்துப்பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணும் போது சில பொருத்தங்கள் அமையாவிட்டால் பரவாயில்லை என்று சொல்வார்கள். ஆனால் யோனிப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமல் கல்யாணம் பண்ணவே பண்ணாதீங்க என்பது ஜோதிடர்
சென்னை: ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ராசிப்பொருத்தம், வசியப்பொருத்தம் என பத்துக்கும் மேற்பட்ட பொருத்தம்
பார்த்து திருமணம் செய்யும் போது சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சொல்வார்கள். ஆனால் யோனிப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் ரொம்ப அவசியமானது. யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே தாம்பத்ய சுகம் சரியாக அமைந்து புத்திரபாக்கியம் பிரச்சனை இல்லாமல் கிடைக்கும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு விலங்கு குறியீடாக உள்ளது. அந்தந்த விலங்குகளின் குணத்திற்கு ஏற்ப தாம்பத்யத்தில் ஈடுபாடு ஏற்படும். யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே உறவில் திருப்தியும் சுகமும் கிடைக்கும். சில மிருகங்களுக்கு சில மிருகங்கள் பகையாக இருக்கும் பகை மிருகங்களுடன் ஜோடி சேர்ந்தால் தாம்பத்யத்தில் தகராறுதான் ஏற்படும். எனவேதான் திருமணம் செய்யும் போது யோனிப்பொருத்தம் ரொம்ப அவசியம் என்கின்றனர்.
அப்படி சரியான பொருத்தம் பார்க்காமல் பார்த்து திருமணம் செய்து வைப்பதனால்தான் முறை தவறிய உறவுகள் ஏற்படுகின்றன. இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. கள்ள உறவுகளும் அதனால் குடும்ப உறவில் சிதைவும் ஏற்படுகிறது.

நட்சத்திரங்களும் விலங்குகளும்
அஸ்வினி - ஆண் குதிரை, பரணி ஆண் யானை, கார்த்திகை பெண் ஆடு, ரோகிணி ஆண் நாகம், மிருகசீரிடம் பெண் சாரை, திருவாதிரை ஆண் நாய்,
புனர்பூசம் பெண் பூனை, பூசம் ஆண் ஆடு, ஆயில்யம் ஆண் பூனை, மகம் ஆண் எலி, பூரம் பெண் எலி, உத்திரம் பெண் எருது, அஸ்தம் பெண் எருமை,
சித்திரை பெண் புலி, சுவாதி ஆண் எருமை, விசாகம் ஆண் புலி, கேட்டை ஆண் மான், மூலம் பெண் நாய், பூராடம் ஆண் குரங்கு, உத்திராடம் கீரி,மலட்டு பசு, திருவோணம் பெண் குரங்கு, அவிட்டம் பெண் சிங்கம், சதயம் பெண் குதிரை, பூரட்டாதி ஆண் சிங்கம், உத்ரட்டாதி பெண் பசு,
ரேவதி பெண் யானை.

யாருடன் யாரை சேர்க்கலாம்
நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.
தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். பகை மிருகங்களுடன் சேர்க்க கூடாது அப்படி சேர்த்தால் மட்டுமே கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படாமல் விரிசல் ஏற்படும்.

தாம்பத்யத்தில் திருப்தி
யோனிப்பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே தாம்பத்ய உறவில் திருப்தியான நிலை ஏற்படும். பகை மிருகங்களை இணைத்தால் வாழ்க்கையே சுவாரஸ்யம் குறைந்து கசப்பாகி விடும். தாம்பத்ய உறவில் திருப்தி ஏற்படாமல் போனால் கள்ள உறவுகளும் சில நேரங்களில் பிரிவும் ஏற்படுகிறது. இன்றைக்கு அதிக அளவில் கள்ள உறவு கொலைகள் ஏற்பட இப்படி பொருத்தமற்ற முறையில் திருமணம் செய்து வைப்பதுதான்.

உடலும் உள்ளமும் பொருந்தவேண்டும்
திருமணப்பொருத்தம் பார்க்கும் போது கணப்பொருத்தம், ரஜ்ஜுப்பொருத்தம் ரொம்ப அவசியம். தம்பதியர் திருமணம் செய்து தாம்பத்ய சுகம் அனுபவித்தால் மட்டும் போதாது. நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் எனபதை இந்த ரஜ்ஜுப்பொருத்தம் தீர்மானிக்கிறது. பெண்கள் தீர்க்கசுமங்கலியாக வாழ இந்த பொருத்தம் அவசியமாகிறது.

சரியான ஜோடி அவசியம்
தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். பாம்புக்கும் எலிக்கும் சேர்த்து வைத்தாலோ, புலிக்கும் மானுக்கும் ஜோடி சேர்த்தாலோ எப்படி சேர்ந்து வாழும் எனவேதான் பொருத்தமான துணையோடு சேர்க்க வேண்டும் ஜாடிக்கேற்ற மூடி, பூட்டுக்கு ஏற்ற சாவி அவசியம் தேவை என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications