அரசாளும் மனைவி... மகாலட்சுமியே மனைவியாகும் யோகம் யாருக்கு கிடைக்கும்

மகாலட்சுமியே மனைவியாக வரவேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த காலத்தில் இரண்டு சம்பாத்தியம் இருந்தால்தான் கஷ்டப்படாமல் குடும்பத்தை ஓட்ட முடியும். யோகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தானே மனைவியும் அமையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். கணவன் சம்பாத்தியத்தில் கட்டு செட்டாக குடும்பம் நடத்தி சேமித்து குடும்பத்தை உயர்த்தும் பெண்கள் இருக்கிறார்கள். தானும் சம்பாதித்து குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துபவர்களும் இருக்கிறார்கள்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த கால கட்டத்தில் பெண்களும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இளைஞர்களும் பெண் பார்க்கின்றனர். ஆனாலும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண் அமைவது அவர்களின் ஜாதக யோகப்படியே அமைகிறது.

ஆண்களின் ஜாதகப்படி, அவருக்கு அமையப்போகும் மனைவி, வேலைக்குச் செல்வாரா என்பதை அறிந்துகொள்ளாலாம். கணவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் இடம் மனைவியைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும். அந்த 7ம் வீட்டில் இருந்து 10ம் இடம் கணவரின் ஜாதகத்தில் 4ம் இடம் ஆகும். இந்த 4ம் வீட்டுக்கு அதிபதியான கிரகம் வலுத்திருந்தால், மனைவி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் யோகம் அமையும்.

 சம்பாதிக்கும் மனைவி

சம்பாதிக்கும் மனைவி

துலா லக்னத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டோன் செவ்வாய். செவ்வாய் 4ல் தன் உச்ச ராசியில் இருப்பாரானால், மனைவி வேலைக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். செவ்வாய் 2ல் விருச்சிகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தாலும் சம்பாதிக்கும் மனைவி அமைவார். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், வீடு, மனை நிலங்கள் சேரும். ஆணின் ஜாதகத்தில் 4க்கு உரிய கிரகம் வலிமை பெற்றுக் காணப்பட்டால், மனைவியால் அந்த ஜாதகருக்கு யோகம் உண்டு.

அதிகாரி மனைவி

அதிகாரி மனைவி

4ம் வீட்டு அதிபதி ஆட்சி, மூலத் திரிகோணம், உச்சம் ஆகிய நிலைகளில் இருக்கும்போது, அந்த ஜாதகரின் மனைவிக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும். 4ம் வீட்டில் சூரியன் அதிபலம் பெற்று இருந்தால், மனைவிக்கு உயர் பதவி, யோகம் அமையும்.

4ம் வீட்டு அதிபதி லக்னம் 7, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும், 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும், மனைவி வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்.

கூட்டுத் தொழில் யோகம்

கூட்டுத் தொழில் யோகம்

களத்திரகாரகன் சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண பலம் பெற்று வலுத்திருப்பாரானால், மனைவியால் யோகம் கூடும். பண வரவு உண்டாகும். சொத்துக்களும் சேரும். சுக்கிரன் பலம் பெற்று 7ம் வீட்டு அதிபதியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால், மனைவியால் வீடு, நிலம், மனை, வாகன யோகம் உண்டாகும். சுகமும் கூடும். 7ம் வீட்டு அதிபதியும் லக்ன அதிபதியும் இணைந்து 4, 10 ஆகிய இடங்களில் வலுப்பெற்று இருந்தால், கணவனும் மனைவியும் கூட்டாகத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

அரசு பதவி யோகம்

அரசு பதவி யோகம்


மேஷ லக்னத்திற்கு 7ம் வீட்டுக்கு அதிபதி சுக்கிரன். 7ஆம் வீட்டுக்கு 10ஆம் வீடான 4ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து அவருடன் 4ஆம் வீட்டோன் சந்திரனும், 9ஆம் வீட்டோன் குருவும் கூடி இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள். மனைவியால் சொத்துக்களும் சேரும். மனைவியுடன் கூட்டு சேர்ந்து பொருள் திரட்டும் யோகமும் உண்டாகும். ரிஷப லக்னத்தில் பிறந்தவருக்கு செவ்வாய் 4ல் இருந்தால், வேலைக்குச் செல்லும் மனைவி அமைவாள். செவ்வாயுடன் சூரியன் ஒன்று சேர்ந்து இருப்பாரானால், மனைவிக்கு அரசுப் பதவி கிடைக்கும். நிலங்களும் சொத்துக்களும் சேரும்.

வண்டி வாகன யோகம்

வண்டி வாகன யோகம்

கன்னி லக்னத்தில் பிறந்தவருக்கு குரு 4ல் அமர்ந்தால் அந்த மகாலட்சுமியே மனைவியாக அமையும் யோகம் வரும். தெய்வ பக்தி மிகுந்த மனைவி கிடைப்பார். வேலைக்குப் போகும் மனைவி அமைவதோடு கௌரவமான பதவி கிடைக்கும். சொத்தும் வாகன யோகமும் உண்டாகும். சுகமான வாழ்வு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+