உலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு ஏற்படுத்தும் கிரகங்கள் - ஜோதிட ரீதியான காரணங்கள்

ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து அவருக்கு எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் வருமா அவருக்கு நோய் வந்தாலும் குணமடையுமா என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள். சர்வதேச எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமான டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு என்ன ஜோதிட ரீதியான காரணங்கள், பரிகாரங்களை பார்க்கலாம்.

ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள். சுக்கிரன் அழகின் அதிபதி அவர் காமரூபன், அழகும் காமமும் இணைந்துதான் தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்துகிறது. லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

லக்னாதிபதியுடன் சனி உடன் ராகு சேர்ந்து இருந்தாலும் பால்வினை நோய் அல்லது புற்றுநோயினால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும். அவருக்கு மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்ணாக இருந்தால் கரு முட்டை உருவாகாத குறைபாடு இருக்கும்.

முறையற்ற உறவு

முறையற்ற உறவு

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இயல்பு மாறி பலருடன் தொடர்பு ஏற்பட கிரகங்களும் காரணமாக உள்ளது.
ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாய் ஒரு ராசியில் சேர்ந்து இருந்தாலே காம இன்பங்களில் மனம் அதிகம் செல்லும். சுக்கிரன் செவ்வாய் கூட்டணியோடு சனி சேர்ந்தாலோ அல்லது சனி பார்த்தாலோ அல்லது சுக்கிரன் செவ்வாயுடன் ராகு சேர்ந்தாலோ முறையற்ற உறவில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ்க்கு காரணமான எச்.ஐ.வி.யை உருவாக்குவது என்பது சுக்கிரன், செவ்வாய், ராகு கூட்டணிதான். இதேபோல சுக்ரன், செவ்வாய், சனி சேர்ந்தாலும் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.

காதலுக்கு உரிய கிரகங்கள்

காதலுக்கு உரிய கிரகங்கள்

ஒருவருக்கு காமம், காதல் எல்லாவற்றையும் தூண்டுவது கண்கள். கண் பார்வைக்குரிய கிரகம் என்று சொன்னால் சூரியன், சந்திரன், சுக்கிரன். இது மூன்றுமே காதலுக்கும் உரிய கிரகம். இதில் சுக்ரன்தான் இனப்பெருக்க உறுப்புகளுக்கு உரியது. வீரியத்தை கொடுப்பது செவ்வாய். சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து இருக்க, அதனுடன் சனியோ ராகுவோ சேர்ந்துவிட்டால் பாலியல் சம்பந்தமான நோய்கள் ஆரம்பித்துவிடும்.

சுகம் தேடும் மனம்

சுகம் தேடும் மனம்

பிறந்த ஜாதகத்தில் கடக லக்னமாக இருந்து அவருக்கு 11ஆம் இடமான சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகியவை சேர்க்கை பெற்றிருந்து லக்னாதிபதியான சந்திரன், 12இல் மறைந்திருந்தால் அந்த ஜாதகர் ஆணாக இருந்தால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்படுமாம். பெண்ணாக இருந்தால் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படுமாம்.

குரு பார்வை

குரு பார்வை

சுக்கிரன் செவ்வாய் கூட்டணி கூடவே ராகு இருந்தால் அந்த தசாபுத்தி நடக்கும் காலத்தில் முறையற்ற தொடர்புகள் ஏற்படும். இதனால் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய் பாதிப்புகள் வரும் எனவே நோய்கள் பாதிக்காமல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதே நேரத்தில் இந்த கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் சுப கிரகமான குரு பார்வை இருந்தால் அவர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வார்கள்.

நோயில் இருந்து மீள பரிகாரம்

நோயில் இருந்து மீள பரிகாரம்

எட்டாம் அதிபதி ஆயுள்காரகன் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி அவர்கள் என்ன கதியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஆயுஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கையைவைத்தும் எச்ஐவி எய்ட்ஸ் நோயிலிருந்து அவர்கள் மீள்வார்களா? அல்லது மரணமா என்பதை கணிக்க முடியும். ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் துர்க்கையை வணங்க நோய் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+