2024 புத்தாண்டு ராசி பலன்: பாக்கெட் நிறைய பணம்.. நினைத்ததை சாதிக்கும் 2 ராசிக்காரர்கள்
சென்னை: புத்தாண்டு பலருக்கும் புது வாழ்க்கையை தரப்போகிறது. 2023ஆம் ஆண்டில் பல சோதனைகளை கடந்து வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. நெருக்கடிகளை சந்தித்தவர்கள் அடித்து நொறுக்கி சாதிக்கப்போகிறார்கள். மேஷம், ரிஷபம் ராசிகளில் பிறந்தவர்களின் பொருளாதார நிலை 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. வருடம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி பயணம் செய்யப்போகிறார். சனி உங்களுக்கு சாதகமாகவே இருப்பார். வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது. ராகு கேதுவும் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரப்போகிறது.

குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்த பிறகு பண வருமானம் அதிகரிக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. மே மாதத்திற்குப் பிறகு காதல் கனிந்து திருமணத்தில் கைகூடி வரும். குரு பலன் வரப்போகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
குழந்தைக்காக நீண்ட நாட்கள் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. நினைத்த இடத்தில் படிக்க மாணவர்களுக்கு யோகத்தை தருவார். பெண்களுக்கு தைரியம் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். பாடாய் படுத்தி வந்த உடல் நலப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. முன்னேற்றத்தை தரக்கூடிய அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது.
ரிஷபம்: சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். சனி, ராகு கேது, குரு ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய சாதகமான பலன்களை தரப்போகின்றனர். அசைக்க முடியாத அற்புதமான யோகத்தை தரப்போகிறது 2024ஆம் ஆண்டு முதல் லாப ராகு நிறைய லாபத்தை தரப்போகிறார். உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.
விரைய ஸ்தானத்தில் உள்ள குரு ஜென்ம ராசிக்கு வரப்போவதால் சில மனக்குழப்பங்கள் வரலாம். குரு பார்வையால் திருமண சுப காரியம் நடைபெறும். பல வழிகளில் இருந்தும் பணம் வரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கல்யாண விசயம் கைகூடி வரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது.
படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும். சோதனைகளை எல்லாம் முறியடித்து சாதனைகளாக மாற்றக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications