2023 இயர் எண்டர் ஜோதிடம்: 2024ல் கோடீஸ்வர யோகம் தரும் ராகு கேது.. பண மூட்டை யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் 2024ஆம் ஆண்டு முதல் மீன ராசியில் பயணம் செய்கின்றனர். ராகு கோடி கோடியாக செல்வத்தை அள்ளிக்கொடுப்பார். கேது அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று ஞானத்தை தருவார். 2024 ஆம் ஆண்டில் யார் வீட்டிற்குள் பண மூட்டை வந்து விழும் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய்கள் தீரும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு 2024ஆம் ஆண்டு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வீடு மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். உங்களின் நீண்ட நாள் கடன்கள் அடைபடும்.

Year ender 2023 astrology news: Rahu Ketu peyarchi Palan Tamil who will get kodeeswara yogam

விருச்சிகம்: போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இனி விடிவு காலம் வந்து விட்டது. தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் நிலவும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கேது சிலருக்கு ஆறுதலையும் முன்னேற்றத்தையும் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

தனுசு: இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். பழைய கடன்கள் அடைப்படும். பிள்ளைகளின் திருமணம் படிப்புக்கு செலவு செய்வீர்கள். கடனுக்கு வட்டி கட்டிய நேரம் மாறி வரவுகள் சேமிப்பாக உயரும். கேதுவினால் தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

மகரம்: 2024ம் ஆண்டு முதல் உங்களுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும்.
பாக்ய ஸ்தானத்தில் மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் எல்லாம் இனி தடையில்லாமல் நடக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.

கும்பம்: ராகு உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

மீனம்: ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார் ராகு ஏழாம் வீட்டில் உள்ள கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும் இதுநாள் வரை தடைப்பட்டிருந்த திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+