புத்தாண்டு ராசி பலன் 2024: குரு பார்வையால் குஷியாகும் ராசிக்காரர்கள்.. கெட்டிமேளச்சத்தம் நிச்சயம்
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. பிறக்கப்போகும் 2024 புத்தாண்டு பலருக்கும் புத்தம் புதிய நம்பிக்கைகளை தரப்போகிறது. புதிய வாழ்க்கை, திருமணம், காதல், குழந்தை பாக்கியத்தை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எந்த ராசிக்காரர்கள் திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
பொன்னான பார்வை: நவ கிரகங்களின் குருவின் அருள் இருந்தால் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசியின் மீது விழுகிறது. 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பலன் ஆண்டு முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. குரு பலனால் யார் வீட்டில் கட்டிலும் தொட்டிலும் ஆடப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: ஜென்மகுருவாக பயணம் செய்யும் குரு பகவான் 5, 7, 9, ஆகிய வீடுகளை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டினை குருபார்வையிடுவதால் திருமணம் சுப காரியம் கைகூடி வரும். காதல் மலரும். ஐந்தாம் பாவத்தை குரு பார்வையிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி இடையேயான உறவு உற்சாகமடையும்.
ரிஷபம்: ஏப்ரல் மாதம் வரை விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு ராசியில் அமர்கிறார். ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். காதல் திருமணம் கைகூடி வரப்போகிறது.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளை பார்வையிடுகிறார். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடைபெறும். சிலருக்கு காதல் மலரும் கைகூடி வரும். நீண்ட நாட்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களின் கனவுகள் நிறைவேறும். திருமணதாகி நீண்ட நாட்கள் குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது
கடகம்: குரு பகவான் ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். மே மாதத்திற்குப் பிறகு லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுடைய ராசிக்கு 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். திருமணம் சுபகாரியம் கைகூடி வரப்போகிறது. உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ பூண்ணிய ஸ்தானம் என்ற பாவத்தை குரு பகவான் பார்வையிடுகிறார். உங்கள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.
சிம்மம்: ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு உங்களுடைய ராசியை பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உங்க வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும்.
கன்னி: அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். குரு பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். ராசிக்கு ஐந்தாம் வீட்டினையும் பார்வையிடுவதால் திருமணம் சுப காரியம் நடைபெறும். திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களின் வீட்டில் தொட்டில் ஆடும்.
துலாம்: 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு சென்றாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் குடும்பம் விருத்தியடையும். திருமணம் கைகூடி வரும். வியாழக்கிழமை விரதம் வெற்றிகளை தேடித்தரும்.
விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்தாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் மீது விழுவதால் திருமணம் தொடர்பாக பேச நல்ல நேரம் கைகூடி வந்துள்ளது. 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைகிறது. காதல் திருமணம் கைகூடி வரும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும்.
தனுசு: குருபகவான் ஆம் வீட்டில் பயணம் செய்தால் எதிர்பார்த்ததை விட பலன்கள் தேடி வரும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மை செய்யும். குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆனாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் மீது விழுவதால் 2025ஆம் ஆண்டு வரைக்கும் உங்கள் ராசிக்கு குரு பலன் உள்ளது திருமண யோகம் கைகூடி வரப்போகிறது.
மகரம்: ஏப்ரல் மாதம் வரைக்கும் குரு பகவான் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். மே மாதத்தில் இருந்து குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
கும்பம்: குரு பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்வையிடுகிறார். ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்களுக்கு குரு பலன் உள்ளது. சித்திரை வரை திருமணம் பேசி முடிக்கலாம். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. மே மாதத்திற்குப் பிறகு திருமண விசயத்தில் கவனம் தேவைப்படும்.
மீனம்: குரு பகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பம் விருத்தியடையும். மே மாதத்திற்குப்பிறகு மூன்றாம் வீட்டில் அமரும் குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications