2024 புத்தாண்டு ராசி பலன்.. பொற்காலம்.. புது வசந்தம்.. புத்தாண்டில் யாருக்கெல்லாம் ராஜயோகம்?
சென்னை: 2023ஆம் ஆண்டு சில நாட்களில் முடியப்போகிறது. 2024ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு புதுமையை தருமா? வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படுமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசிபலன். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்
மேஷம்: 2024ஆம் ஆண்டு முதல் சனி, குரு, ராகு கேதுவின் பயணம் சாதகமாக உள்ளது. லாபமான ஆண்டாக அமையப்போகிறது. குரு பகவான் ஜென்ம குருவாக இருந்து குடும்ப குருவாக மாறப்போகிறார். பண வருமானம் பல வழிகளிலும் வரும். பண விசயத்தில்
கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும்.திருமணம் சுபகாரியம் நடைபெறும். புது முயற்சிகள் கைகூடும். படித்து முடித்து விட்டு தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் இட மாற்றமும் வரும்.

ரிஷபம்: தொழில் சனி விரைய குரு, லாப ராகு என 2024ஆம் ஆண்டு உங்களுக்கு நவகிரங்களின் பயணம் உள்ளது. உயர் பதவி கிடைக்கும். உங்களுடைய குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். புது முயற்சிகள் கை கூடும், உங்களின் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். தொட்ட காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். சகல பாக்கியத்தையும் நீங்க அடையப்போகிறீர்கள்.
லாப ராகுவின் பயணத்தால் உங்களுக்கு நிறைய பண வருமானம் வரும். சுப விரையங்களும் நடைபெறப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். முடங்கிய தொழில்கள் மீண்டு அதிக லாபம் தரும். 2024ஆம் ஆண்டில் வீடு, மனை, வாங்கும் யோகம் அமையும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தடுமாறி தலைமறைவான உங்களுக்கு கடன்கள் அடைபடும்.
மிதுனம்: புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. வேலையில் மாற்றம் முன்னேற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு தேடி வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம் கை கூடி வரப்போகிறது. பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். புதிய வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக இருந்தாலும் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. லாப வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்களுக்கு நிறைய அள்ளித்தரப்போகிறார். பண வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பதவிகள் பட்டங்கள் தேடி வரும் உங்கள் கனவுகள் பூர்த்தியாகும். தலைமை பொறுப்பு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்த தொழில் கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications