2024 புத்தாண்டு ராசி பலன்.. அதிகார பதவி.. புரமோசனுடன் சம்பள உயர்வு பெறும் ராசிக்காரர்கள்
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த ஆண்டில் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம். பிறக்கப்போகும் புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்குமா? பொருளாதார நிலை வளர்ச்சி அடையுமா என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் 2024ஆம் ஆண்டு முதல் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: 2024ஆம் ஆண்டு முதல் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிகார பதவி யோகம் தேடிவரப்போகிறது. நல்ல வேலை வாய்ப்பு அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை டாப் கியரில் ஏறப்போகிறது. சச யோகம் கை கொடுக்கப்போகிறது. சொல்லும் செயலும் சிறப்பாக அமையப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அற்புதமான ஆண்டு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சண்டை போட்டு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். புது வீடு கட்டும் யோகமும், வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வரப்போகிறது. நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கன்னி: 2024ஆம் ஆண்டு முதல் உங்களின் பிரச்சினைகள் எல்லாம் நீங்கப்போகிறது. கடன், நோய் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகள் கைகூடும். தடைகள் விலகி சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி ஏற்படும். உங்களின் பொருளாதார நிலைமை மேம்படும். குரு பகவானின் அருளால் பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. சனி பகவான் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார். ராகு கேதுவினால் மிகப்பெரிய ராஜயோகம் தேடி வரப்போகிறது.
துலாம்: சுக்கிரன் அருள் அபரிமிதமாக உங்களுக்கு கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு பகவான் குருவை போல செயல்பட்டு உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். பொருளாதார நிலை உயரும். வருமானம் அதிகரிக்க வங்கி சேமிப்பும் உயரும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவை. இருக்கும் வேலையை பொறுப்போடு கவனமாக செய்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம்: எத்தனையோ சோதனைகளை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆம் ஆண்டு முதல் சுபகாரியம், திருமணம் தடையின்றி நடைபெறும். கூட்டு தொழில் லாபத்தை கொடுக்கும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. வேலை, தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, சொத்து வாகன வசதி வாய்ப்பு பெருகும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வீடு தேடி வரும் கடன்கள் அடைப்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications