புத்தாண்டு ராசி பலன் 2024: நோய்கள் நீங்கும்.. மருத்துவ செலவு குறையும்.. 2024ல் யாரெல்லாம் கவனம்?
சென்னை: நோய்கள் உடலில் இருந்தாலே எந்த வேலையும் செய்ய முடியாது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் செல்லும் அதே நேரத்தில் ஜோதிடரிடமும் செல்வார்கள். 2023ம் ஆண்டில் பலவித நோய்களால் அவதிப்பட்டவர்கள் 2024ஆம் ஆண்டில் குணமடைந்து சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். நவ கிரகங்களின் பயணத்தால் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். ப்ளட் பிரசர் கட்டுக்குள் வரும். வாட்டி வதைத்த சுகர் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த நோய் விலகப்போகிறது. தொற்று நோய்கள், தோல் நோய்கள் உங்களை விட்டு விலகும். சரியான மருத்துவ சிகிச்சை பெறுவீர்கள். படுத்த படுக்கையாக இருந்தவர்கள் கூட நடமாடுவீர்கள்.

ரிஷபம்: கடந்த காலத்தில் நோய்கள் வாட்டி வதைத்தது. உடலிலும் மனதிலும் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மருத்துவ செலவுகள் கட்டுப்படும். விஷக்கடி, அலர்ஜி நோய்கள் குணமடையும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த வயிறு பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. வாயு பிரச்சினை, அஜீரணக்கோளாறு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரலாம். உணவு விசயத்தில் கவனமாக இருங்கள்.
மிதுனம்: சங்கடங்களும் சஞ்சலங்களும் விலகப்போகிறது. நீண்ட நாட்களாக நோய்க்காக சிகிச்சை பெற்றவர்களுக்கு புதிய விடிவு காலம் பிறக்கப்போகிறது. வயதானவர்களுக்கு 2024ஆம் ஆண்டு வசந்தகாலமாக இருக்கப்போகிறது. அரிப்பு, தோல் நோய்கள் முற்றிலும் குணமடையும். பரம்பரை தொற்று நோய்கள் குணமடையும். மூச்சுத்திணறல், நரம்பு பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. பக்கவாத நோய் ஏற்பட்டு படுத்தவர்கள் கூட நோய்கள் நீங்கி நடமாடுவீர்கள்.
கடகம்: அஷ்டமத்து சனியால் வாட்டி வதைத்த நோய்கள் குணமடையும். உடல் உஷ்ணத்தால் ஏற்பட்டு வந்த பித்த நோய் குணமடையும். கை கால் குடைச்சல், மூட்டு வலி பிரச்சினைகள் குணமடையும். மூட்டுவலி, இடுப்புவலி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. சரியான மருத்துவ சிகிச்சை கைக்குடுக்கும். நரம்பு கோளாறுகள் நீங்கும். பித்த மயக்கம் நீங்கும். உணவு விசயததில் கவனமாக இருங்கள். இரவு உணவில் அதிக காரம் வேண்டாம். எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து விடுங்கள்.
சிம்மம்: அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கண்டச்சனி கவனமாக இருக்கவேண்டும். விஷ பூச்சிகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகன பயணங்களில் கவனம் தேவை. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தோல் நோய்கள் அலர்ஜி வரலாம் கவனம் தேவை. மறைமுக நோய்கள் வரலாம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி: நோய்க்காக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. நோய்க்காக மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் விரைவில் குணமடைவார்கள். 6ஆம் இட சனி ருண ரோக சனி நோய்களை நீக்கப்போகிறார். ஆரோக்கியம் அதிகரிக்கும். உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். நரம்பு பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications