Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2024: எட்டிப்பார்க்கும் திடீர் நோய்கள்.. மருத்துவ செலவு யாருக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் செல்லும் அதே நேரத்தில் ஜோதிடரிடமும் செல்வார்கள். 2023ம் ஆண்டில் பலவித நோய்களால் அவதிப்பட்டவர்கள் 2024ஆம் ஆண்டில் குணமடைந்து சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். நவ கிரகங்களின் பயணத்தால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

துலாம்: தலைமேல் அமர்ந்த கேதுவினால் பயமுறுத்திய நோய்கள் 2024ஆம் ஆண்டு முதல் கட்டுப்படும். பரம்பரை நோய்கள் மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையும். உடல் அசதி, கண் பிரச்சினை குணமடையும். வயிறு பிரச்சினை, அல்சர் தொந்தரவு கட்டுப்படும். நுரையீரல் பிரச்சினை, மூச்சு திணறல் உள்ளவர்கள் தூசி அலர்ஜியிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

Year ender 2023: New year rasi palan Health Horoscope 2024 Thulam to Meenam

விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனி ஆட்டி படைப்பதால் திடீர் நோய்கள் எட்டிப்பார்க்கும். தொற்று நோய் பரவும் காலம் என்பதால் விலகி இருப்பது நல்லது. பரம்பரை வியாதிகள் வெளிப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்துவீர்கள். மே மாதம் வரைக்கும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் நேரடி பார்வையால் நோய்கள் குணமடையும்.
பெண்கள் நெருப்பிடமும், மின்சாதனங்களை இயக்கும் போதும் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு: நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்வீர்கள். மூன்றாம் இடத்தில் பயணம் செய்யும் சனி பகவான் நோய்களை குணப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்குவார். 2024ஆம் ஆண்டில் உற்சாகமாக செயல்படுவீர்கள். வாயு பிரச்சினை குணமடையும். குரு பகவானின் 12ஆம் இடத்து பார்வையால் உங்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

மகரம்: நீண்ட நாட்களாக வயிறு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டவர்கள், அல்சர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்கள் குணமடையும். இரவு நேர உணவில் கவனம் தேவை. காரமான உணவுகளை தவிர்க்கவும். எண்ணெய் பலகார உணவுகளை தவிர்த்து ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கால் வலி மூட்டுவலி பிரச்சினையால் அவதிப்பட்டவர்கள் குணமடைவார்கள். விஷப்பூச்சிகளிடம் இருந்து விலகியிருக்கவும்.

கும்பம்: உடலில் மறைந்திருந்த நோய்கள் மீண்டும் எட்டிப்பார்க்கும். தோல் நோய்கள், அலர்ஜியால் அவதிப்பட வேண்டியிருக்கும். 2024 ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான செலவு செய்ய வேண்டியிருக்கும். ஜென்ம சனி நோய்களை வெளிப்படுத்துவார். குரு பகவானின் பார்வையால் மே மாதத்திற்குப் பிறகு நோய்கள் குணமடையும். காய்ச்சல், வயிறு வலியால் அடிக்கடி அவதிப்பட்டவர்கள் உடனே குணமடைவார்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை.

மீனம்: ஏழரை சனியில் முதல் படியில் இருக்கிறீர்கள். புதிது புதிதாக நோய்கள் எட்டிப்பார்க்கும். மன ரீதியான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். சோம்பல் எட்டிப்பார்க்கும். அசதி, சோர்வினால் அவதிப்படுவீர்கள். மருத்துவ செலவுகளால் குணமடைவீர்கள். மே மாதத்திற்குப் பிறகு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பருவகால நோய்களில் இருந்து குணமடைவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+