சனி பெயர்ச்சி பலன் 2023: பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களா? சனி சொல்லும் சேதி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு லாப சனி 2024ஆம் ஆண்டு அள்ளித்தரப்போகிறார். பரணியில் பிறந்தவர்கள் 2024ஆம் ஆண்டு தரணி ஆள்வார்களா என்று பார்க்கலாம்.

பரணி நட்சத்திரம்: சுக்கிரன், செவ்வாய் அம்சத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரக்காரர்கள். இந்த சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டகரமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்று சொல்வார்கள். சனி பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவிகள் தேடி வரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையின் உச்சத்திற்கு போகப்போகிறீர்கள்.

Year ender news 2023: Sani Peyarchi palan and Parikaram for Bharani star

வேலையில் புரமோசன்: உங்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். நிறைய சலுகைகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வருமானம் பெருகும்: லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும்.

சனி பகவான் பார்வை: அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கேட்ட இடத்திற்கு இட மாற்றமும் உண்டாகும். தொழிலில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் 3வது பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

சொத்து சேரும்: 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.

வேலையில் இடமாற்றம்: வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும்.

ஆரோக்கியத்தில் கவனம்: உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். குச்சனூர் சென்று குடும்பத்தோடு வணங்கி வர சனி பகவானால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+