சனி பெயர்ச்சி பலன் 2023: கண்டச்சனி கலக்கம் வேண்டாம்.. 2024ல் ராஜயோகம் தேடி வரும் காலம்
சென்னை: சனி பகவான் கண்டச்சனியாக ஏழாம் வீட்டில் பயணம் செய்தாலும் கலக்கம் வேண்டாம். சிம்ம ராசியில் உள்ள கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ராஜயோகத்தையும் சச மகா யோகத்தையும் தரப்போகிறார்.
மகம்: சிம்ம ராசியில் மகம் நட்சத்திரம் 4 பாதங்களும் உள்ளது. சனி பகவான் உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டிற்கு உடைய சனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து கண்டக சனியாக பயணம் செய்வதோடு சிம்ம ராசியை பார்க்கிறார்.. ஆட்சி பெற்ற சனி பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. சச மகா யோகம் கைகூடி வருகிறது.

கண்டச்சனி: ஜாதகத்தில் 7ஆம் இடம் களத்திர ஸ்தானம், நம்முடைய வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகளை குறிக்கும் இடம். அந்த இடத்தில் சனி பயணம் செய்வதால் கவனத்தோடும் நிதானமாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் கவலைப்பட தேவையில்லை. ஆட்சி பெற்ற சனிபகவான் உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டார். குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
சச மகாயோகம்: உங்களுக்கு சச மகாயோகம் கை கூடி வரப்போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வதால் வீணான பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் கவனத்தோடும் நிதானமாகவும் செயல்படுவது அவசியம். விஷ பூச்சிகளிடம் கவனத்தோடு இருப்பது அவசியம்.
பொன்னான காலம்: கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலம் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி பகவான் தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச யோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும். பண விசயத்தில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை நம்பி அகலக்கால் வைக்காதீர்கள்.
ராஜயோக காலம்: பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் உங்களின் பொருளாதார நிலை உச்சத்திற்கு செல்லும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விரட்டியடிப்பீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை தொடங்க இது செழிப்பான காலம். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.
பதவி உயர்வு: ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் வெற்றிகள் தேடி வரும். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும் போது தொழில் வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
சனியின் பார்வை: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும் போது யோகங்கள் அதிகரிக்கும் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது. சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுகிறது. அற்புதங்கள் நிகழப்போகிறது. அதே நேரத்தில் ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். 2024ஆம் ஆண்டில் புது வண்டி வாகனம் வாங்குவீர்கள்.












Click it and Unblock the Notifications