சனி பெயர்ச்சி பலன் 2023: கொட்டப்போகும் பணமழை.. சட்டென்று மாறும் வாழ்க்கை யாருக்கு?
சென்னை: 2023ஆம் ஆண்டில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து மீண்டு வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு நல்ல பலன்களை தர வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் தொழில் வியாபாரத்தை விரிவு படுத்துவார். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியை தேடி தரப்போகிறது. 2024 ஆம் ஆண்டு சனிபகவானால் உங்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் உழைப்பும் வேகமும் அதிகரிக்கும்.

உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான காலமாக இருக்கப்போகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய தொழில்கள் எல்லாம் லாபத்தில் இயங்கத் தொடங்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
வருமானம் அதிகரிப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுநாள் வரைக்கும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வகையிர் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும்.
உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும். உங்களுடைய பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பார்கள். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும்.
அடகு வைத்திருந்த சொத்து பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும்.
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.
சனி பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் இனி எல்லாம் வசந்த காலமே.












Click it and Unblock the Notifications