சனி பெயர்ச்சி பலன் 2023: சகல ஐஸ்வர்யத்தையும் தரப்போகும் சனி பகவான்.. யாருக்கு பொற்காலம்?
சென்னை: சனி பகவான் ஏழரை ஆண்டுகாலம் அதிர்ஷ்டத்தையும் பொற்காலத்தையும் தரப்போகிறார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். குரு பகவானின் நட்சத்திரம் புனர்பூசம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கும்ப ராசியில் பயணம் செய்யும் குபேர யோகத்தை தரப்போகிறார்.
பொற்காலம்: ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் இனி ஏழரை ஆண்டுகளுக்கு பொற்காலம்தான். அதெப்படி ஏழரை ஆண்டுகள் என்று கேட்கிறீர்களா? ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி அடுத்து மீனம் ராசிக்கு நகரும் போது பத்தாம் வீடு, மேஷம் ராசிக்கு சனி நகரும் போது லாப ஸ்தானமான 11ஆம் வீடு இப்படி ஏழரை ஆண்டுகாலம் சனி உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்.

விரும்பியது கிடைக்கும்: சனிபகவான் நற்பலன்களை வாரி வழங்கப்போகிறார். உங்களின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக இருக்கப்போகிறது. உங்களின் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். விரும்பிய யாவும் கைக்கு வந்து சேரும். 2030ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் உங்களுக்கு நற்பலன்களை அள்ளி தரப்போகிறார். உங்களின் உழைப்புக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வருவதால் வருமானமும் அதிகரிக்கும்.
ஐஸ்வர்யம் கிடைக்கும்: உங்கள் ராசிக்கு ஒன்பதுக்கு உடைய சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் தொட்டதெல்லாம் வெற்றிதான். பணவரவு அபரிமிதமாக இருக்கும். நேர்மையாக இருப்பீர்கள். ஆலய தரிசனம் அற்புதமான பலன்களை தரும். அஷ்ட சனியால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சவுபாங்கியங்களும் கிடைக்கும்.
முயற்சிகளில் வெற்றி: சனிபகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்க்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும் வெற்றிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
சுப விரைய செலவுகள்: இந்த கால கட்டத்தில் புதிய சொத்துக்களை வாங்கலாம் சொந்த வீடு கட்டலாம். பணவருமானம் அதிகரிக்கும் கடன்கள் அடைபடும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாடு பயணம் யோகத்தை தரப்போகிறது. ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகள் வழியாக சந்தோஷங்கள் அதிகரிக்கும். அவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.
குடும்பத்தில் ஒற்றுமை: சனிபகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பத்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். நோய்கள் தீரும், வெற்றிகள் தேடி வரும். எதிரிகளின் தொல்லை ஒழியும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். போட்டி தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது.
பட்டம் பதவிகள் தேடி வரும்: மாணவர்களுக்கு கல்வி நிலை அற்புதமாக இருக்கும். இதுநாள்வரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். அரசியலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். பதவிகள் பட்டங்கள் தேடி வரும். சங்கடங்கள் விலகும் காலம் வந்து விட்டது. சாதனைகள் செய்யப்போகிறீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் கிடைக்கும். கடன்கள் அடைபடும் நேரம் கைகூடி வரப்போகிறது. திருநாள்ளாறு சனிபகவானை போய் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications