சனி பெயர்ச்சி பலன் 2023: 2024ல் வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. தொழிலில் கொட்டப்போகும் பண மழை
சென்னை: 2023ஆம் ஆண்டு பலருக்கும் பலவித படிப்பினைகளை கொடுத்திருக்கும். இன்னும் சில நாட்களில் 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த காலங்களில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து மீண்டு வந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு நல்ல பலன்களை தர வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருக்கும். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.
ரிஷப ராசியில் உள்ளது ரோகிணி நட்சத்திரம். சந்திரன் உச்சம் பெறுவது இந்த நட்சத்திரத்தில்தான். சந்திரனை அதிபதியாகக் கொண்ட ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு பத்தாம் அதிபதி தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் அவரது வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால். உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும்.

சனிபகவான் நீதிமான் எனவேதான் அவருக்கு இறைவன், காலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தான வீடுகளின் மீது விழுகிறது.
சனி பகவான் நல்ல தொழில் வாய்ப்பு வசதியை வழங்கப்போகிறார். உங்களின் தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். தொழிலில் போட்டிகள் குறையும். உங்களுக்கு இருந்த இன்னல்கள் நீங்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
உங்களின் உழைப்பிற்கு ஏற்ப வருமானம் அதிகரிக்கும். பிரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைக்கு ஆளாகி பணியிழப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
2024ஆம் ஆண்டு மட்டுமல்லாது 2025ஆம் ஆண்டு வரைக்கும் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபமோ லாபம்தான். செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும். அதே நேரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம். திரும்ப வரும் என்ற உத்தரவாதமில்லை.
வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். எனவே கவலை வேண்டாம் கணபதியை வணங்க, கவலைகள் நீங்கும் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.
இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை.
இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் கவனமாக செய்யவும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.
திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். 2024ஆம் ஆண்டு இறுதிக்கும் திருமணம் நடைபெறும். வீட்டில் கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை அமைய வாய்ப்பு ஏற்படும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications