கன்னி ராசிக்கு எந்தெந்த விஷயங்களில் யோகம்?.. வருமானம் உயருமா?.. நவம்பர் மாத பலன்கள்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் கன்னி ராசியினருக்கு தொழில், வேலை, குடும்பம், பணவரவு எப்படி இருக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த கிரக மாற்றங்களானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

november-matha-palan-kanni-rasi-people-will-achieve-huge-success-during-this-period

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லவைகள் கூடுதலாக நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். 2 ஆம் இடத்தில் புதன் இருக்கிறார். மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் சுக்கிரன் ராசியிலேயே நீச்சமாக இருக்கிறார். ராசியின் பிற்பகுதியில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கையாள் சிறிது செலவுகள் வரக்கூடிய நிலைமை ஏற்படும்.

செலவுகள் வரும்

விரயச் செலவுகள் செல்லும் அமைப்பு உள்ளது. அதனை சமாளிக்கும் அளவுக்கு வருமானங்கள் வரக்கூடிய அமைப்பு உள்ளது. வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற அமைப்பு உள்ளது. ஏற்றமதி, இறக்குமதி தொழில்களில் இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மூன்றாம் இடத்துக்குப் போகிறார். அரசு அனுகூலம், அரசு ஆதாயம் கிடைக்கும்.

அனுகூலம்

செவ்வாயும், சூரியனும் பரிவர்த்தனை ஆவதால் அரசாங்கத்திடம் இருந்து ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் நடக்கும் யோகம் உண்டாகும். சான்றிதழ்கள், அனுமதிகள் போன்றவை நடக்கும். நல்லவை கூடுதலாக நடக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிரிந்து வாழலாம் என்று நினைத்தவர்கள் கூட சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு உள்ளது. குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

முன்னேற்றம்

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் அமைப்பு உள்ளது. தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உள்ளது. செலவுகள் வந்தாலும் கூடுதலான வருமானம் பெறக்கூடி அமைப்புள்ளதால் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.

வருமானம்

வியாபாரிகள், தொழில் முனைவோர்கள், விவசாயிகளுக்கு இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஆதாயங்கள் உண்டாகும். மாதத்தின் முதல் 15 நாட்கள் செலவுகள் ஏற்படும். பிற்பகுதி 15 நாட்கள் நல்ல வருமானம் ஏற்படும். அடுத்த ஜூன் மாதத்தில் இருந்து அஷ்டம சனி ஆரம்பிக்கவுள்ளதால் இப்போதில் இருந்தே கவனமாக இருப்பது நல்லது. அகலகால் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+