3 ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் வரும் ஆபத்து.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

november-matha-palan-which-3-zodiac-signs-should-be-careful-during-on-this-november-month

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தாய் வழி, தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். துணைக்கும், உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும் யோகம் உண்டாகும். சண்டை, சச்சரவுகள் நீங்கி அன்பு செலுத்தும் காலகட்டம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், நரம்பு தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

தெய்வீக வழிபாடுகள், தெய்வ மார்க்க பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் பிறர் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. காதல் அமைப்பில் நண்பர்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் வந்தால் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.

பெற்றோர், பெரியோர் விஷயங்களில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் உறவுகளால் தொந்தரவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வண்டி, வாகனங்களை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வேலைக்காரர்களால் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்ரி மந்திரத்தை சொல்லி வருவது நன்மையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேஷம்

பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வயிறு தொடர்பாக சிறு பிரச்சனைகள் வந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அனுகூலத்தை தரும். சிலர் தெய்வம் ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் துணையிடம் சண்டைகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடத்தில் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.

முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் தீரும். புதிய புதிய பொறுப்புகள் கிடைக்கும். அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ஏற்படும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றிகள் ஏற்படும்.

எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். வாகனங்களை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் கண்டிப்பாக புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். முருகரின் சுப்ரமணிய புஜங்கத்தை படிப்பது கேட்பது, முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்ல மேன்மையைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு லாபம், சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்த தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். மனதில் சாந்தமும், சந்தோஷமும் ஏற்படும்.

உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிடித்த ஹோட்டலுக்கு சென்ற சாப்பிட்டு மகிழ்வீர்கள். சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் யோகம் ஏற்படும். வீடு கட்டுவது, வீடு மாற்றுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்றவற்றை செய்வீர்கள். தொழில் விஷயத்தில்
பதவி உயர்வுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்துப் பகுதி, முதுகுத் தண்டுவடம், கால் பகுதியில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஹார்மோன் பிரச்சனைகளில் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்யவில்லை எனில் தேவையில்லாத பாதிப்புகளுக்குள்ளாக நேரிடும். நரசிம்மர் வழிபாடு சகலவிதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+